ETV Bharat / state

'எந்தச்சிக்கலும் இல்லாமல் சீரான மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது' - அமைச்சர் செந்தில் பாலாஜி - அமைச்சர் செந்தில் பாலாஜி

பருவ மழை தொடங்கியதில் இருந்து மின் விநியோகத்தில் எந்தச் சிக்கலும் இல்லாமல் சீரான மின் விநியோகம் வழங்கப்பட்டு வருவதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

Etv Bharat செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி

author img

By

Published : Nov 2, 2022, 7:21 PM IST

சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில், பருவ மழைக் காலத்தில் மின் விநியோகத்தில் எந்தவித இடையூறும் ஏற்படாமல் இருக்க செய்யப்படும் நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியத்தலைவர் ராஜேஷ் லக்கானி உள்ளிட்ட உயர் அலுவலர்களுடன் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆலோசனை நடத்தினார்.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, "வட கிழக்குப்பருவ மழையை எதிர்கொள்ள எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின்படி இதுவரை 14 லட்சத்து 69 பராமரிப்பு சிறப்புப்பணிகள் நடைபெற்றுள்ளன. 40 ஆயிரம் மின் கம்பங்கள் மாற்றப்பட்டுள்ளன. 32ஆயிரத்து 685 சாய்ந்த மின் கம்பங்கள் சரி செய்யப்பட்டுள்ளன.

18,380 மின் மாற்றிகள் கையிருப்பில் உள்ளன. 2 லட்சம் மின் கம்பங்கள் கையிருப்பில் உள்ளன. மின் புகார்களை பொறுத்தவரை 99 விழுக்காடு புகார்கள் உடனுக்கு உடன் சரி செய்யப்படுகிறது. மீதமுள்ள புகார்கள் விரைவில் சரி செய்யப்படும். அதற்காக அமைக்கப்பட்டுள்ள 24 மணி நேர மையத்தில் தற்போது, ஒரே சமயத்தில் 75 புகார்களை அணுக வழி வகை செய்யப்பட்டுள்ளது.

பருவ மழைக்காலங்களில் சீரான மின் விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது. அதற்காக 11 ஆயிரம் பணியாளர்கள் கூடுதலாகப்பணி அமர்த்தப்பட்டுள்ளனர். சென்னையைப்பொறுத்தவரை 2 ஆயிரத்து 788 மின் பெட்டிகள் சரி செய்யப்பட்டுள்ளது.

செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி

கடந்தாண்டு மழையால் பாதிக்கப்பட்ட பில்லர் பாக்ஸ்கள் இருக்கும் இடங்களைக்கண்டறிந்து 3ஆயிரத்து 66 இடங்களில் பில்லர் பாக்ஸ்கள் ஒரு அடி உயரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. எந்த இடங்களிலும் மின் தளவாடங்களுக்கான பற்றாக்குறைகள் இல்லை. மழைக்காலத்தில் தொடர்ந்து அயராது பணியாற்றி வரும் மின் பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு மனமார நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார்.

இதையும் படிங்க: 'சென்னையில் மழைநீர் தேங்கிய இடங்களில் இன்று மாலைக்குள் நீர் வெளியேற்றப்படும்'

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.