ETV Bharat / state

முதலமைச்சர் ஸ்டாலினின் மருமகன் சபரீசனை சந்தித்தேனா ? - ஓபிஎஸ் மகன் சொன்ன பதில் - முதலமைச்சர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன்

முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்ததை அரசியல் ஆக்குவது நியாயம் இல்லை என தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ப.ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் ஸ்டாலினின் மருமகன் சபரீசனை தாம் சந்தித்ததாக சொல்லப்படுவது வதந்தி என்றும் அவர் கூறியுள்ளார்.

ops-son-ravindhranath-says-about-did-i-meet-sabareesan-son-in-law-of-cm-stalin முதலமைச்சர் ஸ்டாலினின் மருமகன் சபரீசனை நான் சந்தித்தேனா ? - ஓபிஎஸ் மகன் சொன்ன பதில்

author img

By

Published : Jun 21, 2022, 7:50 AM IST

Updated : Jun 21, 2022, 11:54 AM IST

சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளரும் தனது தந்தையுமான ஓ. பன்னீர்செல்வம் இல்லத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் வருகை தந்தார். நீண்ட நேர ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், "திட்டமிட்டபடி பொதுக்குழு நடைபெறுமா என்பதை பொறுத்திருந்து பாருங்கள். பொதுக்குழுவில் பங்கு பெற தனக்கும் அழைப்பு வந்துள்ளதாகவும் நிச்சயம் பொதுக்குழுவில் பங்கேற்பேன்.

எனது நாடாளுமன்றத் தொகுதி மக்களின் அடிப்படைத் தேவைகள் மற்றும் கோரிக்கைகளை வைக்கவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்தேன். சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது அவர்களது தொகுதி கோரிக்கைகளை முதலமைச்சரிடம் வைக்கும் வாய்ப்பு கிடைக்கிறது.

முதலமைச்சர் ஸ்டாலினின் மருமகன் சபரீசனை சந்தித்தேனா ? - ஓபிஎஸ் மகன் சொன்ன பதில்

ஆனால், நாடாளுமன்ற உறுப்பினரான எனக்கு வாய்ப்பு கிடைக்காத காரணத்தால், கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டேன். நாடாளுமன்றத் தொகுதி மக்களின் தேவைகளைக் கோரிக்கைகளாக முதலமைச்சரிடம் தெரிவித்தேன். இந்த விவகாரத்தை அரசியலாக்குவது நியாயம் இல்லை.

பொதுக்குழுவை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒத்தி வைப்பதாக அறிவித்துள்ளது குறித்து தற்போது கருத்து சொல்வது சரியாக இருக்காது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசனை சந்தித்ததாக சொல்லப்படுவது வதந்தி" என கூறினார்.

இதையும் படிங்க: ஈபிஎஸ் VS ஓபிஎஸ்... A to Z தகவல்கள்...

Last Updated : Jun 21, 2022, 11:54 AM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.