ETV Bharat / state

குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சக்கர நாற்காலி இருக்கு... ஆனா இல்லை?! - Too bad there is no even a wheelchair

குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் உடல்நிலை சரியில்லாத மூதாட்டிக்கு சக்கர நாற்காலி கிடைக்காததால் பயிற்சி மாணவர்கள் கையில் தூக்கிச்சென்ற நிலை ஏற்பட்டுள்ளது.

மருத்துவமனையில் சக்கர நாற்காலி கிடைக்காததால் மூதாட்டியை கையில் தூக்கிச் சென்ற அவலம்

author img

By

Published : Nov 3, 2022, 7:39 PM IST

சென்னை: சென்னை குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு உடல்நிலை சரியில்லாததால் ஊரப்பாக்கத்தைச் சேர்ந்த மாரியம்மாள்(80), என்ற வயதான மூதாட்டி தனது மகளுடன் சிகிச்சைப் பெறுவதற்காக வந்துள்ளார்.

மருத்துவமனைக்குள் வந்த மூதாட்டியால் காய்ச்சல் காரணமாக நடக்க முடியாமல் போனதால், அவரது மகள் சக்கர நாற்காலியை மருத்துவமனையில் கேட்டுள்ளார். ஒரு மணி நேரத்திற்குப்பிறகு ஒரு சக்கர நாற்காலி கிடைத்தாலும் அதுவும் பழுதாகி இருந்தது. அதனால், செய்வதறியாது தவித்த மூதாட்டியும், அவரது மகளும் மருத்துவமனை வளாகத்திலேயே நின்று கொண்டிருந்தனர்.

இதனைக்கண்ட மருத்துவமனையில் இருக்கும் பயிற்சி மாணவர்கள் மூதாட்டியை தங்களது கைகளால் தூக்கிச் சென்று அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதித்தனர். அப்போது, அரசு மருத்துவமனையில் சக்கர நாற்காலி கூட இல்லை என்ற குற்றச்சாட்டை நோயாளிகள் முன்வைக்கின்றனர்.

மருத்துவமனையில் சக்கர நாற்காலி கிடைக்காததால் மூதாட்டியை கையில் தூக்கிச் சென்ற அவலம்

இதுகுறித்து குரோம்பேட்டை தலைமை மருத்துவர் பழனிவேல் அவர்களிடம் கேட்டபோது, மருத்துவமனையில் 25 சக்கர நாற்காலிகள் தயார் நிலையில் இருப்பதாகவும், நடந்த சம்பவம் குறித்து விசாரணை செய்வதாகவும், உடனடியாக இரண்டு சக்கர நாற்காலியை அவசர சிகிச்சைப்பிரிவிற்கு வழங்குவதாகவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: சென்னையில் 200 இடங்களில் வரும் 5ஆம் தேதி மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.