ETV Bharat / state

சென்னை பெருநகர மாநகராட்சி: தற்காலிக தூய்மைப் பணியாளர்களின் பணிக்காலம் நீட்டிப்பு! - தேசியநகர்புற வாழ்வாதார இயக்கம்

சென்னை மாநகராட்சி, தேசியநகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மூலம் தற்காலிக தூய்மைப் பணியாளர்களின் பணிக்காலத்தை மேலும் ஆறு மாதத்திற்கு நீட்டித்து அனுமதி வழங்கியுள்ளது.

Chennai Metropolitan Corporation
Chennai Metropolitan Corporation
author img

By

Published : Oct 28, 2022, 9:50 PM IST

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் சென்னை மேயர் பிரியா ராஜன் தலைமையில் இன்று (28.10.2022) ரிப்பன் கட்டட மாமன்றக் கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் துணை மேயர் மு.மகேஷ்குமார், மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங்பேடி, நிலைக்குழுத்தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள்‌ உட்படப்பலர் கலந்துகொண்டனர்.

இதுகுறித்தான அறிவிப்பில், 'பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம்-4 , கோட்டம் -34 முதல் 48 வரை துப்புரவுப்பணி போதுமான நிரந்தர பணியாளர்கள் இல்லாததால் தேசிய நகர்ப்புறவாழ்வாதார இயக்கம்(NULM) குழுக்கள் மூலம் தற்காலிகத் தூய்மைப் பணியாளர்களின் பணிக்காலம் வரும் 30.09.2022உடன் முடிவடைவதால், மேலும் ஆறு மாதத்திற்கு ( 01.10.2022 முதல் 31.03.2023 வரை) துப்புரவுப் பணிகளை மேற்கொள்ள பணியாளர்களை பணியமர்த்தியமைக்கு பின்னேற்பு அனுமதி வழங்கியுள்ளது.

சென்னையின் பழமை வாய்ந்த பெரம்பூர், ஆர்.கே.நகர், வியாசர்பாடி மற்றும் இராயபுரம் போன்ற முக்கியப் பகுதிகளை உள்ளடக்கியதாகும். மேலும், திருவொற்றியூர் நெடுஞ்சாலை, தண்டையார்பேட்டை நெடுஞ்சாலைகளை உள்ளடக்கிய 35.5 கி.மீ., நீளமுள்ள 49 பேருந்து சாலைகள் மற்றும் 39,365 கி.மீ., நீளமுள்ள 2,846 உட்புறச்சாலைகளை, பெருநகர சென்னை மாநகராட்சியின் பணியாளர்களைக்கொண்டு தனியாக தினமும் துப்புரவுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

இது தவிர, பெருநகர சென்னை மாநகராட்சி, மண்டலம்-4-க்குட்பட்டப் பகுதிகளில் அரசு சின்ன ஸ்டான்லி மருத்துவமனை, தண்டையார்பேட்டை ரயில் நிலையம், முல்லை நகர் பேருந்து நிலையம், காசிமேடு சுடுகாடு, முல்லை நகர் சுடுகாடு, சீதாராம் நகர் சுடுகாடு, பூங்காக்கள், விளையாட்டுத்திடல்கள், ஓட்டல்கள், குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் மற்றும் இலவச பொதுக்கழிப்பிடங்கள், மட்கும் குப்பை, மட்காத குப்பைகளைச்சேகரித்து தரம் பிரிக்கும் பணிகள் ஆகியவற்றைச்சீரிய முறையில் சுத்தமாகப் பராமரித்திட வேண்டும்.

மேற்கண்டப்பகுதிகளில் பொதுமக்கள் அதிகமாக வசிப்பதாலும் குப்பைகள், அதிக அளவில் அகற்ற வேண்டி உள்ளது. இந்நிலையில் தற்போதுள்ள 72 நிரந்தரப்பணியாளர்கள் மற்றும் 947 தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் (NULM) பணியாளர்களை மட்டுமே கொண்டு துப்புரவு பணிமேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மண்டலம்-4, கோட்டம்-34 முதல் 48 வரை உள்ள வார்டுகளில் துப்புரவுப்பணிகளான தெருக்களை சுத்தம் செய்வது, குப்பைகளை அகற்றுவது மற்றும் இதரப்பணிகளுக்காக 2011ஆம் ஆண்டு மக்கள் தொகையினை கணக்கிட்டு மற்றும் இதர முக்கியமான அலுவலகங்களைக் கணக்கில் கொண்டு தினந்தோறும் கொட்டப்படும் குப்பைகளை அகற்றுவதற்கு மொத்தம் 1714 பணியாளர்கள் மேலாண்மை திடக்கழிவு துறையின் மூலம் என்று வரையறுக்கப்பட்டது.

அதில் நிரந்தரப்பணியாளர்கள் 672 பேர் பணியாற்றி வருகின்றனர். கூடுதலாக தேவைப்பட்ட 947 தற்காலிக துப்புரவுப் பணியாளர்களை அனுமதி பெற்று 01.04.2021 முதல் 31.03.2022 வரை ஒருஆண்டு காலத்திற்குப் பணி செய்ய பணியமர்த்தப்பட்டார்கள். இந்த ஆணை 31.03.2022அன்று காலாவதியாகிவிட்டது என்பதால் தற்காலிக தூய்மைப் பணியாளர்களின் பணிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தக் கூட்டத்தில் பெருநகர மாநகராட்சி மருத்துவ சேவைகள் துறை, நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையங்கள் மாற்றம் நகர்ப்புற சமுதாய நலவாழ்வு மையங்கள் நிர்வாக வசதிக்காக சில நகர்ப்புற சுகாதார மையங்களின் பெயர்களை திருத்தி அமைப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளது.

மேலும் திடக்கழிவு மேலாண்மைத்துறை, ஆர்வமுள்ள சேவை வழங்குநர்களைப் பயன்படுத்தி பெருமளவு குப்பைகளை உருவாக்குபவர்களிடமிருந்து பெறப்படும் குப்பைகளை மட்கும் மற்றும் மட்காத குப்பை என தரம்பிரித்து மறுசுழற்சி செய்வதற்கு ஆர்வமுள்ள சேவை வழங்கும் முகவர்களை நியமிக்கவும், ஆறாவது கட்டமாக பணியமர்தலுக்கு தேர்வு செய்யப்பட்ட சேவை வழங்கும் நிறுவனங்களை நியமிக்கவும் அனுமதி வழங்கியுள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கட்டிப்போட்டு நகை, பணம் கொள்ளை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.