தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வருவதையொட்டி திமுக பரப்புரையை தொடங்கியுள்ளது. அதே நேரத்தில் பாஜகவும் வேல் யாத்திரை நடத்தி வருகிறது.
இந்நிலையில், பாஜகவின் வேல் யாத்திரைக்கு பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் படியும், மத்திய அரசின் வழிக்காட்டுதல் அடிப்படையிலும் நவம்பர் மாதம் 30ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் மீண்டும் தமிழ்நாட்டில் அரசியல் கூட்டங்கள், மதம் சார்ந்த வழிபாடுகள், கலாசார நிகழ்ச்சிகள் போன்றவற்றிக்கு நவம்பர் 16ஆம் தேதிவரை தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் கலச்சார நிகழ்ச்சிக்கு மட்டும் சமூக இடைவெளியினை பின்பற்றி அரசு அனுமதி வழங்கி உள்ளது. அரசியல் கூட்டங்களுக்கு அரசு தடை விதித்து இருப்பதால், அரசியல் கூட்டங்களில் ஈடுபட்டு வரும் பாஜகவினரும் ,திமுகவினரும் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் தலைமைச் செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள அரசாணையில், பாரதியா வித்யாபவன் தலைவர் கலச்சார நிழக்ச்சிக்கு அனுமதிக்க வேண்டும். டிசம்பர் மாதம் நடைபெறும் ஆண்டு கலச்சார நிகழ்ச்சிக்கும் அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். கலாச்சார நிகழ்ச்சிகளில் 200 பேர் மட்டுமே பங்கேற்கலாம்.
மூடப்பட்ட அறை அல்லது அரங்குகளில் நடக்கும் நிகழ்ச்சிகளில் 50 விழுக்காட்டினருக்கு மிகாமல் நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி அளிக்கப்படுகிறது. கரோனா தடுப்பு வழிமுறைகளை கடைப்பிடித்து கலாசார நிகழ்ச்சிகளை நடத்திக்கொள்ளலாம்.
முகக் கவசம், சமூக இடைவெளி உள்ளிட்ட கரோனா தடுப்பு விதிகளை பின்பற்ற அறிவுறுத்த வேண்டும். அரசியல் மற்றும் மத நிகழ்ச்சிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.