ETV Bharat / state

தேநீர் கடைக்கு அனுமதி... ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அறிவிப்பு

tea
தேநீர்
author img

By

Published : Jun 13, 2021, 11:54 AM IST

Updated : Jun 13, 2021, 1:38 PM IST

11:49 June 13

கரோனா தொற்று குறைவான 27 மாவட்டங்களில் நாளை முதல் கூடுதல் தளர்வுகளை அறிவித்து தமிழ்நாடு அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

சென்னை: தமிழ்நாட்டில் கரோனா தொற்றின் பரவலைக் கட்டுப்படுத்த, கடந்த மே 24 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் முழு ஊரடங்கு நல்ல பலனை அளித்துள்ளது. இந்நிலையில் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக்கூடாது என்ற நோக்கத்தில் நோய்ப் பரவல் முழுமையாகக் கட்டுக்குள் வராத  கோவை உள்ளிட்ட ஏழு மேற்கு மாவட்டங்கள், தஞ்சை உள்ளிட்ட நான்கு டெல்டா மாவட்டங்கள் தவிர பிற மாவட்டங்களில் தளர்வுகள் சற்று விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக பல்வேறு தரப்பினரிடமிருந்து பெறப்பெற்ற கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு மேற்படி 11 மாவட்டங்கள் தவிர்த்து தமிழ்நாட்டின் இதர 27 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளை அறிவித்து தமிழ்நாடு நாடு அறிக்கை வெளியிட்டுள்ளது. அவை பின்வருமாறு.,

  • தேநீர் கடைகள் நாளை முதல் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை பார்சல் முறையில் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. 
  • பார்சல் முறையில் தேநீர் வாங்க வரும்போது பொதுமக்கள் பாத்திரங்களைக் கொண்டு வந்து தேநீர் பெற்றுச் செல்லுமாறும், நெகிழிப் பைகளில் தேநீர் பெறுவதைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடைகளின் அருகே நின்று தேநீர் அருந்த அனுமதியில்லை. 
  • பேக்கரிகள், உணவகங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது போல, இனிப்பு கார வகைகள் விற்கும் கடைகளுக்கும் அனுமதி அளிக்கப்படுகிறது. இவை காலை 8 மணி முதல் மதியம் 2 மணிவரை இயங்கலாம். இங்கும் பார்சல் முறை விற்பனை மட்டும் அனுமதிக்கப்படுகிறது. 
  • பொதுமக்களின் நலன் கருதி அரசு அலுவலகத்திலிருந்து சான்றிதழ்கள், சேவைகளைப் பெற இனி இ-சேவை மையங்கள் ஜுன் 14ஆம் தேதியிலிருந்து இயங்கவுள்ளது.
  • கட்டுமானப் பணிகள் மேற்கொள்ள ஏற்கெனவே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அப்பணிகளுக்கான அலுவலகங்கள் இயங்காததால், பணியாளர்களுக்குச் சம்பளம் வழங்கவும் வாங்கும் கட்டுமானப் பொருட்களுக்குப் பணம் செலுத்தும் பணிகளைக் கருத்தில் கொண்டு, கட்டுமான நிறுவன அலுவலகங்கள் 50 விழுக்காடு பணியாளர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, தொற்று குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் நாளை முதல் டாஸ்மாக் கடைகள், சலூன் கடைகள், அழகு நிலையங்கள் செயல்பட அரசு அனுமதியளித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: நாளை முதல் டாஸ்மாக் கடைகள் திறப்பு!

Last Updated : Jun 13, 2021, 1:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.