ETV Bharat / state

முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் மகனுக்கு அதிமுக மாநகராட்சி தலைவர் பதவி! - The son of a former legislator is the chairman of the AIADMK

சென்னை மாநகராட்சியின் அதிமுகவின் தலைவராக முன்னாள் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் கே.பி கந்தனின் மகனான சதீஷ் குமார் அறிவிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மகனுக்கு அதிமுக மாநகராட்சி தலைவர் பதவி!

author img

By

Published : Jun 5, 2022, 6:48 AM IST

சென்னை: மாநகராட்சி 200 வார்டுகளிலும் திமுக பெருவாரியாக வெற்றி பற்று மேயர் பதவியை தன்வசம் இழுத்துக் கொண்டது. மேலும் 15 இடங்களில் மட்டுமே அதிமுக வெற்றி பெற்றது. மேயராக பிரியா ராஜன் பதவியேற்ற பிறகு கிட்டத்தட்ட இரண்டு மாமன்ற உறுப்பினர்கள் கூட்டம் முடிந்துவிட்டது.

இந்த நிலையில் சென்னை மாநகராட்சியின் அதிமுகவின் தலைவராக சதீஷ் குமார் அறிவிக்கப்பட்டுள்ளார். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர்கள் பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மாநகராட்சி அதிமுக தலைவராக சதீஷ் குமார், துணை தலைவர்களாக ஜான், சத்தியநாதன் ஆகியோரும், செயலராக கார்த்திக், கொறடாவாக கதிர்முருகன், பொருளாளராக சேட்டு ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் அதிமுக தலைவராக பதவி ஏற்கும் சதீஷ்குமார் முன்னாள் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் கே.பி கந்தன் மகனாவார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: Swiggy ஊழியரை தாக்கிய போக்குவரத்து காவலர் பணியிட மாற்றம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.