இந்தியா முழுவதும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வு நடைபெற்று வருகிறது. சென்னை உள்பட 14 நகரங்களில் நீட் தேர்வு நடைபெறுகிறது. இதில், சென்னை, மயிலாப்பூரில் பி.எஸ்.சீனியர் செகன்டரி பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையத்தில் 120 பேர் தேர்வு எழுதுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அங்குத் தேர்வெழுத வரும் மாணவர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு, சானிட்டைசர்கள் வழங்கப்பட்டன. மேலும் மாணவர்களுக்குத் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் காவல்துறை மூலம் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மதியம் ஒரு மணி அளவில் பள்ளிக்கல்வித்துறை செயலர் தீரஜ் குமார், நீட் தேர்வெழுத உள்ள தனது மகளை தேர்வு மையத்திற்கு அழைத்து வந்தார். பின்னர் அவரைத் தேர்வு மையத்திற்கு அனுப்பி வைத்துவிட்டு அங்கிருந்து அவர் திரும்பினார்.
இதையும் படிங்க:நீட் தேர்வு 2020 : முழுவீச்சில் நடைபெறும் கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள்!