ETV Bharat / state

நிவாரணம் கேட்டு போராட்டம் நடத்தியவர்கள் மீதான விசாரணைக்கு தடை!

சென்னை: கஜா புயலின்போது நிவாரணம் கேட்டு சாலை மறியல் போராட்டம் நடத்திய 140 பேர் மீதான வழக்கு விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது .

சென்னை உயர்நீதிமன்றம்
author img

By

Published : May 10, 2019, 2:51 PM IST

2018ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நாகை திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கஜா புயல் கடுமையாகத் தாக்கியது. இதில் பலர் வீடுகள், விவசாய நிலங்களை இழந்தனர்.இந்நிலையில் நாகை மாவட்டம், வேதாரண்யம், தலைஞாயிறு பகுதியைச் சேர்ந்த நூறுக்கும் மேற்பட்டவர்கள், நிவாரணம் கேட்டு போராடினர். அப்போது அவர்கள் மீது காவல் துறை தடியடி நடத்தி 140-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கு விசாரணை தற்போது வேதாரண்யம் நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது. இது தொடர்பாக குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. இதையடுத்து, இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். நியாயமான முறையில் நிவாரணம் கேட்டதற்காக தங்கள் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது என்றும், எனவே வழக்கை விசாரிக்க தடை விதிக்க வேண்டும் என்றும் மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி இளந்திரையன் நிவாரணம் கேட்டு சாலை மறியல் போராட்டம் நடத்திய 140 பேர் மீது தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

Intro:Body:

கஜா புயலின் போது பாதிக்கப்பட்டதால் நிவாரணம் கேட்டு சாலைமறியல் போராட்டம் நடத்திய 140 பேர் மீதான வழக்கு விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது .

கடந்த 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நாகை திருவாரூர் , தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கஜா புயல் கடுமையாக தாக்கியது. இதில் பலர் வீடுகள் மற்றும் விவசாய நிலங்களை இழந்தனர்.

இந்த நிலையில் நாகை மாவட்டம் வேதாரண்யம் தலைஞாயிறு பகுதியைச் சேர்ந்த இனியவன் உள்ளிட்ட நூறுக்கும் மேற்பட்டவர்கள், நிவாரணம் கேட்டு போராடினர். அப்போது அவர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தி 140க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்தது.

இந்த வழக்கு விசாரணை தற்போது வேதாரண்யம் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டு விட்டது. இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில்  வழக்கு தொடர்ந்தனர்.

நியாயமான முறையில் நிவாரணம் கேட்டதற்காக தங்கள் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது, எனவே வழக்கை விசாரிக்க தடை விதிக்க வேண்டும் என்று மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி இளந்திரையன் நிவாரணம் கேட்டு சாலை மறியல் போராட்டம் நடத்திய 140 பேர் மீது தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.