ETV Bharat / state

'காவல் துறையினரின் பாலிசி குற்றம் பூஜ்ஜியமாக வேண்டும் என்பதே!' - chennai district news

சென்னை: காவல் துறையினரின் பாலிசி குற்றம் பூஜ்ஜியமாக வேண்டும் என்பதுதான், குற்றம் பெரிதோ, சிறியதோ காவல் துறை உடனடியாக நடவடிக்கை எடுக்கும் எனச் சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் தெரிவித்தார்.

chennai police
chennai police
author img

By

Published : Sep 18, 2020, 8:12 PM IST

சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் காணாமல்போன, திருடப்பட்ட ஆயிரத்து 193 செல்போன்களை 12 காவல் மாவட்ட சைபர் பிரிவு காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். அவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட செல்போன்களை சென்னை காவல் துறை ஆணையர் மகேஷ்குமார் உரியவர்களிடம் வழங்கினார்.

அப்போது, மகேஷ் குமார் பேசுகையில், "12 காவல் மாவட்டங்களிலும் 12 காவல் துறை துணை ஆணையர்களிடமும் காணொலி அழைப்புமூலம் பொதுமக்கள் புகார்கள் கொடுத்துவருகின்றனர். தற்போது சைபர் குற்றங்கள் அதிகம் நடப்பதால் 12 காவல் மாவட்டங்களிலும் சைபர் பிரிவாக தொடங்கப்பட்டுள்ளது. சைபர் குற்றங்கள் தொடர்பான புகார்கள் ஆணையர் அலுவலகம் வந்துதான் புகார் கொடுக்க வேண்டிய நிலை இருந்தது.

தற்போது அந்தந்த காவல் மாவட்ட துணை ஆணையர் அலுவலகத்தில் உள்ள சைபர் பிரிவிலேயே புகார் கொடுக்கலாம். இதுவரை 600-க்கும் மேற்பட்ட சைபர் குற்றங்கள் தொடர்பான புகார்கள் வந்துள்ளன. இதில், 50-க்கும் மேற்பட்ட புகார்கள் தீர்த்துவைக்கப்பட்டுள்ளன. சைபர் குற்றத்தால் பறிக்கப்பட்ட 18 லட்ச ரூபாயை உரியவர்களுக்குத் திரும்ப கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தொலைந்துபோன செல்போன்களில் அனைத்து விவரங்களும் இருக்கும். செல்போன் நம்மில் ஒன்றாக இருக்கிறது. செல்போன்கள் தொலைந்துபோன மற்றும் பறிக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பான புகார்களைப் பதிவுசெய்து விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளேன். இதுவரை ஆயிரத்து 193 செல்போன்களைப் பறிமுதல் செய்துள்ளோம். இதன் மதிப்பு சுமார் 1 கோடியே இரண்டு லட்சம் ரூபாய் ஆகும்.

பறிமுதல்செய்யப்பட்ட செல்போன்கள் சென்னையிலும், தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களிலும், பிற மாநிலத்திலும் இருந்துள்ளன. சைபர் பிரிவில் எந்தப் புகார் வந்தாலும் உடனே நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. சென்னை காவல் துறையினர் பாலிசி குற்றம் பூஜ்ஜியமாக வேண்டும். குற்றம் பெரியதாக இருந்தாலும் சரி, சிறியதாக இருந்தாலும் காவல் துறை நடவடிக்கை எடுக்கும்" என்றார்.

இதையும் படிங்க: 70 அடி பாஜக கொடிக்கம்பம் இரவோடு இரவாக இடித்து அகற்றம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.