ETV Bharat / state

வேறு ஒருவர் வாங்கிய லோனுக்கு ஆந்திர அமைச்சருக்கு கால் செய்து தொந்தரவு செய்த 4 பேர் கைது

தனியார் கடன் செயலியில் வாங்கிய கடனை வசூலிப்பதற்காக கால் சென்டர் மூலம் ஆந்திர அமைச்சருக்கு 50 முறை கால் செய்து தொந்தரவு செய்த தனியார் கால் செண்டர் அலுவலகத்தில் ஆந்திரா காவல்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டு 4 பேரை கைது செய்துள்ளனர்

ஆந்திரா அமைச்சருக்கு கால் செய்து லோன் வாங்கிய பணத்தைத் திருப்பிக் கேட்ட 4 பேர் கைது

author img

By

Published : Jul 29, 2022, 8:14 PM IST

சென்னை: 8.50 லட்சம் ரூபாய் கடனுக்கான ரூ.25,000 EMI தொகையை வசூலிக்க வாடிக்கையாளர் செல்போனை ஹேக் செய்து, ஆந்திர அமைச்சருக்கு சென்னையைச்சேர்ந்த கால் சென்டர் பணியாளர்கள் , 1 மணி நேரத்தில் 50-க்கும் மேற்பட்ட முறை போன் செய்து தொந்தரவு செய்துள்ளனர்.

நெல்லூர் தலைமையக காவல் நிலையத்திலிருந்து வந்த தனிப்படை காவல்துறையினர் கால் சென்டரில் சோதனை நடத்தி 2 கணினி, 1செல்போன் ஆகியவற்றைப்பறிமுதல் செய்து எடுத்துச்சென்றுள்ளனர். தனியார் லோன் ஆப்பில் கடன் வாங்கும் நபர்களின் செல்போன் ஹேக்செய்து, தனிநபர் விவரங்களை கொள்ளையடித்து, ஆந்திர அமைச்சருக்கு தொல்லை கொடுத்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் 300-க்கும் மேற்பட்ட டெலிகாலர்கள் செயல்படுவது ஆந்திர காவல்துறையினரின் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. சென்னை திருமங்கலம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஜவஹர்லால் நேரு சாலையில் அமைந்துள்ளது, கோல்மேன் கால் சென்டர்.

அதே பகுதியில் அரும்பாக்கம், மற்றும் வடபழனி ஆகியப்பகுதியில் இவர்களின் கால் சென்டர் கிளைகள் 24 மணி நேரமும் செயல்பட்டு வங்கிக்கடன் கட்டத் தவறியவர்களை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாகத் தெரியவந்துள்ளது .

இந்நிலையில் சென்னையை சேர்ந்த அசோக் என்பவர் தனியார் லோன் செயலி மூலம் சமீபத்தில் 8.50 லட்சம் ரூபாய் கடன் வாங்கியிருந்ததாக கூறப்படுகிறது. வாங்கிய கடனுக்கு மாத EMI தொகையாக ரூபாய் 25,000 சரியாக கட்டப்படாத நிலையில் லோன் ஆப் நிறுவனம் அசோக்கின் தொலைபேசி எண்ணை திருமங்கலத்தில் செயல்பட்டு வரும் கோல்மேன் கால் சென்டருக்கு கொடுத்து, கடனை வசூல் செய்ய தொலைபேசி மூலம் பேசுவதற்காக கொடுத்துள்ளனர்.

ஆனால், இந்த கோல்மேன் கால் சென்டர் பணியாளர்கள் அசோக் தொலைபேசி எண்ணை பயன்படுத்தி அவருடைய செல்போனை ஹேக் செய்து, அதில் உள்ள தொலைபேசி எண்களுக்குத் தொடர்ந்து போன் செய்து வந்ததாக கூறப்படுகிறது. அதில் ஆந்திராவைச் சேர்ந்த விவசாயத்துறை அமைச்சர் காகானி கோவர்தன ரெட்டியின் தொலைபேசி எண்ணுக்கு மட்டும் இந்த கோல்மேன் கால்சென்டரில் இருந்து 50-க்கும் மேற்பட்ட முறையில் தொலைபேசி மூலம் தொடர்ந்து பேசி, அசோக் வாங்கிய கடனுக்கு EMI தொகையை கட்டுமாறு தொல்லை கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து நெல்லூர் தலைமையக காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அமைச்சர் காகானி கோவர்தன ரெட்டி
புகார் தெரிவித்தார். அவரது உதவியாளர் செர்குரி சங்கரய்யாவிடமிருந்து பெறப்பட்ட புகாரின் மீது நடவடிக்கை எடுக்க நெல்லூரில் இருந்து சென்னை வந்த சிறப்பு தனிப்படை காவல் துறையினர் திருமங்கலத்தில் செயல்பட்டு வந்த கோல்மேன் கால் சென்டரின் விவரங்களை சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் செயல்படும் இடத்தை கண்டுபிடித்தனர்.

குறிப்பாக முதுகூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறப்பு தனிப்படை காவல் துறையினர் தொல்லை கொடுத்த திருமங்கலம் கால் சென்டர் அலுவலகத்தில் இருந்த 2-க்கும் மேற்பட்ட கணினி மற்றும் 1 லேண்ட் லைன் போன் ஆகியவற்றைப் பறிமுதல் செய்து நெல்லூர் சென்றுள்ளனர்.

மேலும் அதன் நிர்வாகிகளிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கால் சென்டரைச்சேர்ந்த நான்கு பேரை கைது செய்து ஆந்திர போலீசார் அழைத்துச்சென்றுள்ளனர். ஆந்திர போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் 300-க்கும் மேற்பட்ட டெலிகாலர்கள் சென்னையில் கால் சென்டர் மூலம் செயல்படுவதாக கண்டுபிடித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த கால் சென்டர் போலி கால் சென்டரா எனவும்; அலுவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கால் சென்டர் தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் விசாரணை நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.

இதையும் படிங்க: ஆன்லைன் லோன் மோசடி... 14 பேர் கைது... ரூ.14 கோடி முடக்கம்...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.