ETV Bharat / state

சென்னை ராயபுரத்தில் 14 ஆயிரத்தைக் கடந்த கரோனா பாதிப்பு

author img

By

Published : Sep 9, 2020, 3:47 PM IST

சென்னை: ராயபுரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்தைக் கடந்துள்ளது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

ராயபுரத்தில் 14000 கடந்தது கரோனா
ராயபுரத்தில் 14000 கடந்தது கரோனா

தமிழ்நாட்டில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட போதிலும் கரோனாவின் தாக்கம் குறையாமல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. குறிப்பாக, சென்னையில் அண்ணா நகர், கோடம்பாக்கம், அடையார் போன்ற மண்டலங்களில் கரோனா தொற்று தீவிரமடைந்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இந்தப் பரவலை குறைப்பதற்கு அந்தப் பகுதி முழுவதும் அதிக மருத்துவ முகாம்கள் மற்றும் மக்களுக்கு தொடர்ந்து மாநகராட்சி சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது என பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

அண்ணா நகர் மற்றும் கோடம்பாக்கத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 16 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இரண்டு மண்டலங்களுக்கு அடுத்த படியாக ராயபுரம் உள்ளது. தற்போது ராயபுரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை 14 ஆயிரத்தைக் கடந்துள்ளது. நோய்த் தொற்று அதிகரித்து வந்தாலும் குணமடைந்தோரின் விழுக்காடு 90ஆக உள்ளது, சிகிச்சைப் பெற்று வருபவர்களில் விழுக்காடு 8ஆக உள்ளது.

இதுவரையிலும் சென்னையில் மொத்தம் ஒரு லட்சத்து 43 ஆயிரத்து 602 பேர் இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 677 பேர் முழு குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். எஞ்சியுள்ள 11 ஆயிரத்து 29 பேரும் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மேலும் 2 ஆயிரத்து 896 பேர் இந்த வைரஸ் தொற்றினால் உயிரிழந்தனர்.

சென்னையில் கரோனா நோய் உறுதி செய்யப்பட்டவர்களின் மண்டல வாரி நிலைப் பட்டியலை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதன்படி,

அண்ணா நகர் - 16224

கோடம்பாக்கம் - 16187

ராயபுரம் - 14091

தேனாம்பேட்டை - 13806

தண்டையார்பேட்டை - 12057

அடையாறு - 11070

திரு.வி.க. நகர் - 10941

வளசரவாக்கம் - 9149

அம்பத்தூர் - 10049

திருவொற்றியூர் - 4588

மாதவரம் - 5120

சோழிங்கநல்லூர் - 4028

பெருங்குடி - 4799

ஆலந்தூர் - 5438

மணலி - 2262

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.