ETV Bharat / state

"இலங்கை தூதரகத்தை முற்றுகையிடுவோம்" - பாமக மாநிலப் பொருளாளர் திலகபாமா எச்சரிக்கை! - Tuticorin Fishermen Arrested Issue - TUTICORIN FISHERMEN ARRESTED ISSUE

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 22 தூத்துக்குடி மீனவர்களையும் விடுதலை செய்யாவிட்டால், அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் மீனவ இயக்கங்களை ஒன்றிணைத்து பாட்டாளி மக்கள் கட்சியினர் இலங்கை தூதரகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்துவோம் என்று அக்கட்சியின் மாநிலப் பொருளாளர் திலகபாமா தெரிவித்துள்ளார்.

பாமக மாநில பொருளாளர் திலகபாமா
பாமக மாநில பொருளாளர் திலகபாமா (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 2, 2024, 2:28 PM IST

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், தருவைகுளம் மீனவ கிராமத்தில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற 22 மீனவர்களை, இலங்கை கடலோர கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, இலங்கை நீதிமன்றத்தால் அபராதம் விதிக்கப்பட்டு சிறையில் உள்ள நிலையில், அந்த 22 மீனவ குடும்பங்களை பாட்டாளி மக்கள் கட்சியின் மாநிலப் பொருளாளர் திலகபாமா நேரில் சென்று ஆறுதல் கூறினார்.

மேலும், மீனவர்கள் பிரச்னை குறித்து ஆலோசனைக் கூட்டத்தையும் தருவை குளத்தில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் வைத்து நடத்தினார். இதில் கலந்துகொண்ட மீனவர்கள் மத்தியில், பாட்டாளி மக்கள் கட்சியின் மாநிலப் பொருளாளர் திலகபாமா உரையாற்றினார்.

திலகபாமா செய்தியாளர் சந்திப்பு (Credits - ETV Bharat Tamil Nadu)

அப்போது பேசிய அவர், "22 மீனவர்களும் வெளியே வரும் வரை இலங்கை தூதரகம் வாயிலில் உட்காருவதற்கு நான் தயாராக இருக்கிறேன். ஏற்கனவே மூன்று மாதங்கள் ஆகிவிட்டது, சாப்பாடு இல்லாமல் பட்டினியோடு இருக்கின்றோம். இதுவரை மாநில அரசு மத்திய அரசிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. தமிழகத்தில் உள்ள எந்த மீனவர்களும் பாதிக்கப்படக்கூடாது. ஆகவே, போராடத் தயாராக வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.

அதன் பின்னர், திலகபாமா செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், "இலங்கை மீனவர்கள் பிரச்னை தீர்க்கப்பட வேண்டும். முதலில் 22 மீனவர்களும் விடுதலை செய்யப்பட வேண்டும். அந்த 22 மீனவர்களுடைய குடும்பத்திற்கும் முதல்வர் பதில் சொல்ல வேண்டும்.

இதையும் படிங்க: குஜராத் வெள்ளத்தில் சிக்கி மீட்கப்பட்ட தமிழர்கள் 26 பேர் சென்னைக்கு திரும்பினர்!

இல்லையென்றால், அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் அனைத்து மீனவ இயக்கங்களையும் ஒன்றிணைத்து பாட்டாளி மக்கள் கட்சியினர் இலங்கை தூதரகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்துவோம். ஆகவே, அரசு இந்த விஷயத்தில் தலையிட்டு 22 பேரையும் விடுதலை செய்து தர முயற்சிக்க வேண்டும்.

மேலும், அடுத்து வரும் காலங்களில் மீனவர்கள் பிரச்னைக்கு தீர்வு காணப்பட வேண்டும். கண்டும் காணாமல் உள்ள அரசுகளுக்கு இந்த மீனவர்களின் குரல் கேட்கப்பட வேண்டும். மத்திய அரசின் மானிய விலையில் வழங்கப்பட்ட படகும் இந்த இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதனையும் வன்மையாக கண்டிக்கிறோம். புதிதாக பதவி ஏற்றுள்ள இலங்கை அதிபர் மீனவர்களின் பிரச்னை குறித்து மீனவர்களை அழைத்து பேசி தீர்வு காண வேண்டும்" என்று தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.