நாடு முழுவதும் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினம் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. நாட்டு மக்கள் அனைவரும் வீட்டில் இருந்தபடியே சுதந்திர தினத்தை கொண்டாடி மகிழ்ந்தனர். இந்நிலையில், சுதந்திர தினத்தன்று சென்னை தி.நகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன், வானதி ஸ்ரீனிவாசன் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டு, விழாவில் பாஜக காவிக் கொடி கம்பத்தில் தேசியக்கொடியை ஏற்றினர்.
இந்தப் புகைப்படத்தை எல்.முருகன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். தொடர்ந்து, இதற்கு பலரும் தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர். இந்நிலையில் தேசியக்கொடியை அவமதிக்கும் விதமாக நடந்துகொண்ட பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன், வானதி ஸ்ரீநிவாசன், இல.கணேசன் உள்ளிட்டோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் ஆணையரிடம் முகப்பேரைச் சேர்ந்த குகேஷ் என்பவர் புகாரளித்துள்ளார்.
இதையும் படிங்க: புதுச்சேரியில் நாளை முழு ஊரடங்கு அமல் - முதலமைச்சர் நாராயணசாமி