கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் ஒரே இடத்தில் கூடுவதை தடுக்கும் விதமாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கூட்டமாக உள்ள சந்தைகள் வெவ்வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுவருகிறது.
இந்நிலையில், எப்போதும் மக்கள் கூட்டத்துடன் பரபரப்புடன் காணப்படும் தி.நகர் சந்தை, ஊரடங்கு உத்தரவுக்குப் பின்பும் மக்கள் கூட்டத்துடனேயே காணப்பட்டது. இதனால் சென்னை மாநகராட்சி தி.நகர் காய்கறி சந்தையை சென்னை வெங்கட் நாரயணா சாலையில், நடேசன் பூங்காவுக்கு எதிரே உள்ள மாநகராட்சி விளையாட்டு மைதானத்துக்கு மாற்றியுள்ளது.
இங்கு காவல் துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். குறுகலான சாலையில், மிகவும் நெருக்கமாக மக்கள் நடமாடும் வகையில் இருந்த சந்தை, தற்போது பரந்து விரிந்துள்ள மைதானத்துக்கு மாற்றப்பட்டுள்ளதால் வியாபாரிகள் சற்று இடைவெளியுடன் காய்கறிகள் விற்பனை செய்கிறார்கள். இருப்பினும் அதிக அளவிலான மக்கள் கூடி போதிய இடைவெளி இல்லாமல் இங்கு காய்கறிகளை வாங்கி வருகிறார்கள்.
இதையும் படிங்க: