ETV Bharat / state

இது வழக்கமான சினிமா அல்ல... உலக அரங்கில் முதல் சினிமா - 'எறும்பு' படம் குறித்து உருகிய நடிகர் சார்லி! - சினிமா செய்திகள்

சுரேஷ்.ஜி இயக்கத்தில் மரியம் ஜார்ஜ், சார்லி, எம்.எஸ். பாஸ்கர் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் எறும்பு. இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர் சார்லி எறும்பு திரைப்படத்தை “இது வழக்கமான சினிமா அல்ல... உலக அரங்கில் முதல் சினிமா” என்று கூறியுள்ளார்.

எறும்பு படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா

author img

By

Published : May 18, 2023, 11:21 AM IST

சென்னை: சுரேஷ்.ஜி இயக்கத்தில் மரியம் ஜார்ஜ், சார்லி, எம்.எஸ் பாஸ்கர் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் எறும்பு. இத்திரைப்படம் இரண்டு சிறுவர்களின் வாழ்க்கையில் நடக்கும் சுவாரஸ்யமான விஷயங்களை பேசியுள்ளது. இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னை வடபழனியில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக இயக்குநர் மித்ரன் ஆர்.ஜவஹர் பங்கேற்றார்.

நடிகர் மரியம் ஜார்ஜ் மேடையில் பேசும் போது, “இது குழந்தைகளுக்கான படம். அனைவரும் பார்க்க வேண்டிய படம். படக்குழு நன்றாக உருவாக்கம் செய்து உள்ளனர். இந்த படம் தஞ்சாவூர் சுற்று வட்டாரங்களில் படமாக்கப்பட்டது. எனக்கு இந்த படத்தில் நடித்தது மகிழ்ச்சியை தருகிறது” என்றார்.

பின்னர் பேசிய நடிகர் எம்.எஸ் பாஸ்கர், “எனக்கு இந்த கதாபாத்திரத்தில் நடித்தது பெரிய சந்தோஷம். டப்பிங் கலைஞனாக இருந்த நான், தற்போது மைத்துனர் சார்லியுடன் இணைந்து நடித்தது ரொம்ப சந்தோஷம். மேலும் சமீபத்தில் கந்து வட்டி கொடுமையினால் ஒரு குடும்பம் தீயிட்டு தற்கொலை செய்து கொள்ளும் போது குழந்தை தவழ்ந்து சென்றது தான் கொடுமையிலும் கொடுமை. நமக்கே நம் மீது வெறுப்பு வருகிறது. அந்தக் கதையை கூறும் இந்தப் படம் நல்ல படம். யாரும் கடன் வாங்கக் கூடாது என்பது எனது வேண்டுகோள்.

மிகச் சரியான கதாபாத்திரத்தை இயக்குநர் வடிவமைத்து, நடிகர்கள் அந்த கதாப்பாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார்கள். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றிப் படம் ஆக வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்” என்றார்.

அவரைத் தொடர்ந்து நடிகர் சார்லி பேசும் போது, “இந்த நிகழ்ச்சியே எனக்கு மகிழ்ச்சியான நிகழ்ச்சியாக இருக்கிறது.2019-ல் ஒரு இளைஞர் வந்து உங்களுக்காக ஒரு கதையை உருவாக்கி இருக்கிறேன் என்றார். ஒரே நாளில் முடித்து விடுவேன் என்றார்‌. காட்டுமன்னார் கோயில் அருகே அறந்தாங்கி கிராமத்தில் படமாக்கப்பட்டது. சுரேஷ் என்ற படைப்பாளிக்கு அந்த கிராமமே உதவியது. நடிகர்களுக்கு நல்ல படங்கள், படைப்பு வருவது நல்ல படைப்பாளிகள் கையில் உள்ளது.

யாரும் ஈகோ இல்லாமல் பணியாற்றிய படம் இது. சுரேஷ் என்ற ஒரு எறும்பு, முழுப் படமாக மாற்றியது தான் எங்கள் எறும்பு படம். எல்லாத் துறைகளிலும் உதவியாளராகப் பணியாற்றிய ஒரே மனிதர், இந்த சுரேஷ். ஜூன் மாதத்தில் வருகிறோம் என்பதைக் கூறவே இந்த நிகழ்ச்சி. இது வழக்கமான சினிமா அல்ல... உலக அரங்கில் முதல் சினிமா என்றே கூறலாம். இந்தப் படம் நிச்சயமாக ஜெயிக்கும்.

இந்த சினிமா காலகட்டத்தில் எல்லாம் போட்டி. இப்போது யார் வேண்டுமானாலும் நடிக்கலாம். யார் வேண்டுமானாலும் சினிமா எடுக்கலாம். தமிழ் சினிமாவில் கோடிக்கணக்கில் செலவு செய்யும் எத்தனையோ யானைகள் வரலாம். ஆனால், எங்கள் சுரேஷின் எறும்பு வெல்லும்” என்றார்.

இயக்குநர் மித்ரன் ஜவஹர் பேசும்போது, “சுரேஷிடம் நானே பார்த்து கற்றுக்கொள்ள ஆசைப்பட்ட விஷயம் தைரியம்.அது நிறையவே சுரேஷிடம் உள்ளது. நான் என்ன மாதிரி படம் பண்ண வேண்டும் என நினைத்தேனோ அந்த மாதிரியான படம் இது. படத்தைப் பார்த்துவிட்டேன் என்ற நம்பிக்கையில் கூறுகிறேன். இந்தப் படத்தின் வெற்றிக்கு காரணமாக இருப்பது நடிகர்கள் தான். அருமையாக நடித்து உள்ளார்கள். குழந்தை நட்சத்திரங்களான சக்தி, மோனிகா இருவரும் அழகாக நடித்திருக்கிறார்கள். ஒரு சில படங்கள் ஏதாவது ஒரு காட்சியில் நம்மை உறைய வைத்துவிடும். அது மாதிரி இந்தப் படம் என்னை செய்துவிட்டது” என்றார்.

இயக்குநர் சுரேஷ்.ஜி பேசும்போது, “போதை என்ற படத்தின் மூலம் அடிபட்டிருந்தாலும் அந்தப் படத்துக்கும் சேர்ந்து இந்தப் படம் வெற்றி படைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. சினிமாவை நம்பி தான் நான் எல்லாமே செய்து கொண்டிருக்கிறேன். இந்தப் படம் ஜெயிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இந்தப் படத்தில் அனைவரும் அருமையாக நடித்திருக்கிறார்கள். இந்தப் படமே ஒரு வாழ்க்கையாக இருக்கும். எறும்பு அனைவருக்கும் பிடிக்கும். கண்டிப்பாக ஜெயிக்கும்” என்று கூறினார்.

இதையும் படிங்க: ‘ராஷ்மிகாவை விட நான் நன்றாக நடிப்பேன்’.. சர்ச்சை பேச்சுக்கு நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் விளக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.