ETV Bharat / state

மீட்பு விமானத்தில் சொந்த ஊர் திரும்பியவர் நடுவானில் உயிரிழப்பு

சென்னை: துபாயிலிருந்து சென்னை வந்த மீட்பு விமானத்தில் பயணித்தவா் நடுவானில் விமானம் பறந்துகொண்டிருந்தபோது திடீரென நெஞ்சுவலியால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மீட்பு விமானத்தில் பயணித்தவா் நடு வானில் விமானம் பறந்து கொண்டிருந்தபோது திடீரென நெஞ்சுவலியால் உயிரிழப்பு

author img

By

Published : Sep 11, 2020, 3:01 PM IST

துபாயிலிருந்து சென்னைக்கு 190 இந்தியா்களுடன் தனியாா் மீட்பு விமானம் இன்று காலை சென்னைக்கு வந்துகொண்டிருந்தது. காலை 9 மணியளவில் விமானம் சென்னையை நெருங்கிக்கொண்டிருந்தபோது விமானத்தில் பயணித்துக்கொண்டிருந்த திருவள்ளூா் மாவட்டம் வானகரம் அருகே அயனம்பாக்கத்தைச் சோ்ந்த பயணி கல்யாணசுந்தரம் (55) என்பவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு வலியால் துடித்தாா்.

இதையடுத்து விமான பணிப்பெண்கள் அவருக்கு முதலுதவி சிகிச்சையளித்ததோடு, விமானிக்கும் தெரிவித்தனா். இதையடுத்து விமானி சென்னை விமானநிலைய கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவித்து, விமானநிலைய மருத்துவக் குழுவினரை தயாா்நிலையில் இருக்க கேட்டுக்கொண்டாா். விமானம் காலை 9.30 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கியது.

உடனடியாக மருத்துவக் குழுவினா் விமானத்திற்குள் ஏறி, கல்யாணசுந்தரத்தை பரிசோதித்தனா். ஆனால் அவா் சீட்டில் சாய்ந்தபடி உயிரிழந்த நிலையில் இருந்தாா்.

மருத்துவா்கள் பரிசோதித்துவிட்டு நுரையீரல் பாதிப்பால் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது என்று அறிவித்தனா். இதையடுத்து விமான நிலைய ஊழியா்கள் அவா் உடலை கீழே இறக்கினா். அதோடு விமான நிலைய காவல் துறைக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.

காவல் துறையினர் விரைந்துவந்து உடலைக் கைப்பற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பிவைத்தனர். மேலும் 174 பிரிவில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனா்.

கரோனா வைரஸ் ஊரடங்கால் துபாயில் 6 மாதங்களாக சிக்கித்தவித்தவா் இன்று விமானத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, வீட்டிற்குச் செல்லும் முன்பு நடுவானிலேயே உயிரிழந்தது சக பயணிகளிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.