ETV Bharat / state

சாட்சியங்களாக வைக்கப்பட்ட பைகளை ஆதரவற்ற குழந்தைகளுக்கு வழங்க நீதிபதி உத்தரவு

author img

By

Published : Feb 9, 2022, 11:14 AM IST

முதன்முறையாகச் சாட்சியங்களாக வைக்கப்பட்ட பைகளை ஆதரவற்ற குழந்தைகளுக்கு வழங்க நீதிபதி உத்தரவிட்டுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

the-judge-ordered-that-the-bags-kept-as-witnesses-be-given-to-unsupported-children
the-judge-ordered-that-the-bags-kept-as-witnesses-be-given-to-unsupported-childrenthe-judge-ordered-that-the-bags-kept-as-witnesses-be-given-to-unsupported-children

சென்னை: தமிழ்நாடு காவல் துறை குற்றப்பிரிவு கூடுதல் டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் தலைமையில் தமிழ்நாடு முழுவதும் குற்றச் சம்பவங்களைத் தடுக்க தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றனர். இதனடிப்படையில் தமிழ்நாட்டில் பல்வேறு நிறுவனங்களின் பெயரில் போலியாகத் தயாரிக்கப்பட்ட தொழில் துறைத் தயாரிப்புகள் கைப்பற்றப்பட்டுவருகின்றன.

அதன் அடிப்படையில் 2018ஆம் ஆண்டு பதிவுசெய்யப்பட்ட வழக்கில் பிரபல நிறுவனங்களின் பெயர்களைப் பயன்படுத்தி போலியாகத் தயாரித்து விற்கப்பட்ட 600 பள்ளி பைகளை, அந்த நிறுவனத்திலிருந்து பறிமுதல்செய்து வழக்கின் ஆதாரமாக வைக்கப்பட்டிருந்தது.

கூடுதல் டிஜிபி மகேஷ்குமார் அகர்வால்
கூடுதல் டிஜிபி மகேஷ்குமார் அகர்வால்

இந்த வழக்கானது நடைபெற்றுவந்த நிலையில் நேற்று சைதாப்பேட்டை 11ஆவது அமர்வு நீதிமன்ற நீதிபதி ஆதரவற்ற இல்லத்தில் படித்துவரும் பள்ளி குழந்தைகளுக்கு சேகரிக்கப்பட்ட சொத்துகளைக் கொடுத்து அப்புறப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டார்.

இதனடிப்படையில் காவல் கண்காணிப்பாளர் அசோக்குமார் தலைமையில் குழு அமைத்து சென்னையில் உள்ள ஆறு அநாதை இல்லங்கள் அதாவது, i) சேவா சக்ரா குழந்தைகள் இல்லம், ii) உண்மையான அறக்கட்டளை, iii) குழந்தைகள் பராமரிப்பு இல்லம், iv) ஸ்ரீ அருணோதயம் அறக்கட்டளை (மனவளர்ச்சி குன்றிய ஆதரவற்றோர் இல்லம்), v) அனைத்து குழந்தைகள் vi) சமர்பனா - ஸ்பாஸ்டிக்ஸ் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான இல்லத்தில் உள்ள என அனைத்து மாணவர்களையும் நேரில் அழைத்து சேகரித்துவைக்கப்பட்டிருந்த வழக்கிற்குச் சொந்தமான சொத்துக்கள் அனைத்தையும் நேரடியாகக் கூடுதல் டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் வழங்கினார்.

ஆதரவற்ற குழந்தைகளுடன் கூடுதல் டிஜிபி மகேஷ்குமார் அகர்வால்

வழக்கமாக ஒரு குற்றச் சம்பவத்தில் கைப்பற்றப்படும் பொருள்களான மது, போதைப் பொருள்கள் உள்ளிட்டவற்றை காவல் துறை அழித்து மட்டுமே வந்த நிலையில் முதன்முறையாக கைப்பற்றப்பட்ட வழக்கின் சொத்துகளை குழந்தைகளுக்கு கொடுக்க நீதிபதி உத்தரவிட்டு உள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆதரவற்ற இல்லத்தில் இருந்து வந்த குழந்தைகளும் புத்தகப் பையினை மகிழ்ச்சியுடன் வாங்கிச் சென்றனர்.

இதையும் படிங்க : காணாமல்போன மூன்று சக்கர வாகனத்தை கண்டுபிடித்து தரக்கோரி மாற்றுத்திறனாளி புகார்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.