ETV Bharat / state

3ஆவது முறையாக சலையில் பள்ளம் - மக்கள் அவதி - road damage in chennai

மயிலாப்பூரிலிருந்து மந்தைவெளி செல்லும் சாலையில் மூன்றாவது முறையாகப் பள்ளம் விழுந்ததால் அப்பகுதி மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மூன்றாவது முறையாக சலையில் விழுந்த பள்ளம்

author img

By

Published : Dec 18, 2021, 11:29 AM IST

வடகிழக்குப் பருவமழை காரணமாக சென்னையில் கடந்த மாதம் முழுவதும் தொடர்ந்து கனமழை பெய்தது. அப்போது மயிலாப்பூரிலிருந்து, மந்தைவெளி செல்லக்கூடிய ஆர்.கே. மடம் சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டது.

உடனே இது குறித்து போக்குவரத்து காவல் துறையினருக்கு அளித்த தகவலின்பேரில் மாநகராட்சி ஊழியர்கள் பள்ளத்தைச் சரிசெய்யும் பணியில் 20 நாள்களாக ஈடுபட்டனர். அதற்குள் அதே சாலையில் மற்றொரு இடத்தில் பள்ளம் ஏற்பட்டது.

மிக முக்கியமான குறுகலான சாலை என்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகினர்.

மூன்றாவது முறையாக சலையில் விழுந்த பள்ளம்
இந்நிலையில் அதே பகுதியில் நேற்று (டிசம்பர் 17) மூன்றாவது முறையாக மீண்டும் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் இப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மாநகராட்சித் துறையினர் முறையாகப் பள்ளத்தைச் சீர்செய்யாமல் சென்றதால்தான் மீண்டும் பள்ளம் ஏற்பட்டுள்ளதாகவும், முறையாகப் பள்ளத்தை மூட வேண்டும் எனவும் வாகன ஓட்டிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.