சென்னை: திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. பல பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தென் மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாகக் கனமழை பெய்தது. இதனால், நான்கு தென் மாவட்டங்கள் கடுமையாகப் பாதித்தது.
கனமழையின் எதிரொலியாக, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகள் நிரம்பின. இதையடுத்து அணைகளுக்கு வரும் தண்ணீர், அணைகளிலிருந்து வரும் தண்ணீர் எனத் தாமிரபரணி ஆற்றில் காட்டாற்று வெள்ளமாக வந்து சேரும் தண்ணீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கரையைத் தாண்டி தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்குள் புகுந்தது.
தாமிரபரணி உற்பத்தியாகும் பாபநாசம் தொடங்கி, கடலில் சேரும் திருச்செந்தூர் அருகே புன்னக்காயல் வரையிலும் ஆற்றின் இருபுறமும் உள்ள நகரங்கள், கிராமங்கள் வெள்ளத்தில் தத்தளித்தன. இதற்காக, தமிழக அரசு சார்பில் பல்வேறு துறை அதிகாரிகளும், பேரிடர் மீட்பு படை உள்ளிட்டோர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், முப்படை அதிகாரிகள் மற்றும் மத்திய அரசு அலுவலர்களுடன் வெள்ளப்பாதிப்பு மற்றும் மீட்புப் பணி குறித்து தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில், ஆளுநர் மாளிகையில் இன்று(டிச.19) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
-
ஆளுநர் அவர்கள், மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்களில் மத்திய அரசுத்துறைகள் மற்றும் பாதுகாப்புப்படைகள் மேற்கொண்டு வரும் மீட்பு நிவாரண பணிகளை சென்னை, ராஜ் பவனில் நடைபெற்ற கூட்டத்தில் ஆய்வு செய்தார்.
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) December 19, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
இந்திய ராணுவம், கடற்படை, கடலோர காவல் படை, விமானப்படை, தேசிய… pic.twitter.com/raRP0EgIoU
">ஆளுநர் அவர்கள், மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்களில் மத்திய அரசுத்துறைகள் மற்றும் பாதுகாப்புப்படைகள் மேற்கொண்டு வரும் மீட்பு நிவாரண பணிகளை சென்னை, ராஜ் பவனில் நடைபெற்ற கூட்டத்தில் ஆய்வு செய்தார்.
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) December 19, 2023
இந்திய ராணுவம், கடற்படை, கடலோர காவல் படை, விமானப்படை, தேசிய… pic.twitter.com/raRP0EgIoUஆளுநர் அவர்கள், மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்களில் மத்திய அரசுத்துறைகள் மற்றும் பாதுகாப்புப்படைகள் மேற்கொண்டு வரும் மீட்பு நிவாரண பணிகளை சென்னை, ராஜ் பவனில் நடைபெற்ற கூட்டத்தில் ஆய்வு செய்தார்.
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) December 19, 2023
இந்திய ராணுவம், கடற்படை, கடலோர காவல் படை, விமானப்படை, தேசிய… pic.twitter.com/raRP0EgIoU
இது குறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பில், "தமிழகத்தின் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்களில் மத்திய அமைப்புகள் மற்றும் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை ஆளுநர் இன்று(டிச.19) சென்னை ராஜ்பவனில் நடைபெற்ற கூட்டத்தில் கேட்டறிந்தார்.
மேலும், ராணுவம், கடற்படை, கடலோர காவல்படை, விமானப்படை, என்டிஆர்எஃப், ரயில்வே, பிஎஸ்என்எல், இந்திய வானிலை ஆய்வு மைய, உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.
இந்திய விமானப்படையினர் சூலுரில் இருந்தும், திருவந்தனபுரத்தில் இருந்தும், விமானங்கள் மூலம் வரவழைக்கப்பட்டு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், தேசிய பேரிடர் மீட்புப் படையினர் 10 குழுக்களாக மீட்பு பணியில் இருக்கின்றனர்.
மேலும், சில இடங்களில், மாநில அரசு அதிகாரிகள் மத்திய அரசு அதிகாரிகளுக்கு மீட்புப் பணிகளின் போதிய ஒத்துழைப்பு தரவில்லை என ஆலோசனைக் கூட்டத்தில் அதிகாரிகள் தெரிவித்தனர் எனவும், மாநில அரசுக்கு அழைப்பு விடுத்தும், யாரும் மாநில அரசுத் தரப்பில் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது".
இதையும் படிங்க: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்க சிறப்பு குழு ஏற்பாடு!