சென்னை: தமிழ்நாடு சட்டப் பேரவையில் இன்று (ஏப். 29) தளி சட்டப் பேரவை உறுப்பினர் ராமச்சந்திரன், தளி தொகுதியில் வன விலங்குகள், காட்டு யானைகளால் விவசாய நிலங்கள் சேதமாகிவருகின்றன. இவர்களுக்கு அரசு சார்பில் நிவாரணங்கள் அறிவிப்பட்டு நிலுவையில் உள்ளன. இந்த நிலுவை தொகையை விரைவாக வழங்க வேண்டும்.
அதேபோல விவசாய நிலங்களுக்கு 100 கி.மீ. சோலர் மின் வேலி, யானை தாக்கி உயிர் இழப்பவர்களுக்கு வழங்கப்படும் நிதியை 5 லட்சத்திலுருந்து 10 லட்சம் ரூபாயாக உயர்த்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்தார்.
இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் ஆர்.ராமச்சந்திரன், “தளி தொகுதியில் ஊருக்குள் நுழையும் காட்டு யானைகளை பட்டாசுகள் வெடித்து காடுகளுக்குள் அனுப்புவது. மனித-யானை மோதலை தவிர்ப்பது உள்ளிட்டவைகளுத்து திட்டங்கள் உள்ளன. அந்த வகையில், 288.48 கிலோ மீட்டர் சுற்றளவில் யானை புகார் கருவிகள், 2 கிலோ மீட்டர் நீளத்திற்கு Granet தடுப்பு சுவர் அமைப்பது, 16.95 கிலோ மீட்டர் தொலைவுக்கு இரும்பு வடைய கம்பிகள் அமைப்பது, சூரிய வேளிகள் அமைப்பது போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
கடந்த 10 ஆண்டுகளில் யானைகளால் 50 பேர் உயிரிழந்துள்ளனர். அதற்கு 166 லட்சம் ரூபாயும், 36 காயம் நிகழ்வுக்கு 7.65 லட்சம் ரூபாயும், பயிர் சேதத்திற்கு 359.137 லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது. உயிரிழப்புக்கான இழப்பீடு தொகை ரூபாய் 4 லட்சம், நவம்பர் 3, 2021 முதல் 5 லட்சமாக அதிகரிப்பட்டுள்ளது" என்றார்.
மேலும் நிலுவையில் உள்ள இழப்பீடு தொகை குறித்து இன்றே அதிகாரிகளுடன் ஆலோசித்து விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் உறுப்பினர் முன் வைத்த அனைத்து கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்" என்றார்.
இதையும் படிங்க: பள்ளி மாணவியை கத்தியால் குத்திய இளைஞரிடம் விசாரணை