ETV Bharat / state

ஆவடி சிலிண்டர் வெடி விபத்து; சிகிச்சைப் பெற்ற சிறுமி பலி - கியாஸ் கசிவு

ஆவடியில் சிலிண்டர் வெடித்த விபத்தில் காயமடைந்து 6 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி பலியானது அப்பகுதி மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆவடி சிலிண்டர் வெடி விபத்து; சிகிச்சை பெற்ற சிறுமி பலி

author img

By

Published : Dec 25, 2022, 11:06 PM IST

ஆவடி சிலிண்டர் வெடி விபத்து; சிகிச்சைப் பெற்ற சிறுமி பலி

சென்னை: ஆவடி கோவில் பதாகை கலைஞர் நகர் 15ஆவது தெருவைச் சேர்ந்தவர், ரோஜா (64). இவர் கணவரை இழந்து தன் மகன் சங்கர் ராஜ் (41), மருமகள் அனிதா (36) மற்றும் பேர பிள்ளைகள் கீர்த்திகா (11), கெளதம் (10) என்பவர்களுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 19ம் தேதி இரவு வீட்டில் ரோஜா அடுப்பை ஆன் செய்த போது கியாஸ் கசிவு காரணமாக திடீரென வீட்டில் இருந்த சமையல் சிலிண்டர் பலத்த சத்தத்துடன் வெடித்தது.

இந்த விபத்தில் ரோஜா, மகன் சங்கர் ராஜ், பேத்தி கீர்த்திகா என்பவர்கள் மேல் தீ பற்றியது. இந்த தீ விபத்தில் ரோஜா 80% காயங்களுடனும், சங்கர் என்பவருக்கு 30% மார்பில் காயங்களுடனும், பேத்தி கீர்த்திகா என்பவருக்கு கால், முகத்தில் 30% காயங்களுடன் பேரன் கௌதம்-க்கு காலில் சிறிய அளவும் தீக்காயம் ஏற்பட்டது. தீக்காயம் பட்டவர்கள் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 20ஆம் தேதி ரோஜா உயிரிழந்தார்.

இதனைத் தொடர்ந்து கடந்த 6 நாட்களாக சங்கர் ராஜ் மற்றும் அவரது மகள் கீர்த்திகா ஆகியோர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று வந்தனர். இந்தநிலையில் 30% தீக்காயமடைந்த குழந்தை கீர்த்திகா சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததை அடுத்து சிலிண்டர் வெடி விபத்தில் பலி எண்ணிக்கை இரண்டாக அதிகரித்துள்ளது. கேஸ் சிலிண்டரில் கசிவு உள்ளது என கூறியும் கவனக்குறைவாக சிலிண்டரை பயன்படுத்தியதால் விபத்தில் இருவர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: பங்குச்சந்தையில் அதிகம் லாபம்; ஆசைகாட்டி மருத்துவரிடம் ரூ.1.74 கோடி ஆட்டையை போட்ட இளம்பெண்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.