ETV Bharat / state

கெளரி விநாயகர் கோயிலுக்குச் சொந்தமான ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க அமைச்சர் உத்தரவு

சிவகங்கை மாவட்டம் காஞ்சரங்கால் கிராமத்தில் உள்ள அருள்மிகு கெளரி விநாயகர் கோயிலுக்குச் சொந்தமான ஆக்கிரமிப்பு நிலங்களை விரைவாக மீட்க நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அமைச்சர் சேகர் பாபு உத்தரவிட்டார்.

the-gauri-ganesha-temple-occupied-land-will-be-reclaim
கௌரி விநாயகர் கோயிலுக்குச் சொந்தமான ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க நடவடிக்கை
author img

By

Published : Jun 20, 2021, 10:41 PM IST

சென்னை: சிவகங்கை மாவட்டம் காஞ்சரங்கால் கிராமத்தில் உள்ள அருள்மிகு கெளரிவிநாயகர் கோயிலுக்குச் சொந்தமான ஆக்கிரமிப்பு நிலங்களை விரைவாக மீட்பது குறித்து இன்று (ஜூன் 20) இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வின் போது, கோயிலுக்குச் சொந்தமான 142 ஏக்கர் நிலங்களில் 96 ஏக்கர் நிலங்கள் தனியார் பெயருக்கு பட்டா மாறுதல் செய்யப்பட்டுள்ளதை மாவட்ட வருவாய் அலுவலர் விரைவாக ஆய்வு செய்து தனியார் பெயரில் உள்ள பட்டாவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

தனியார் பெயரில் உள்ள அனைத்து நிலங்களையும் கோயில் பெயருக்கு பட்டா மாற்றம் செய்ய உடனடியாக அனைத்து வகையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அதேபோல தனியாரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள கோயிலுக்குச் சொந்தமான மீதமுள்ள 46 ஏக்கர் நிலத்தில், அனுமதி இல்லாமல் கட்டப்படும் கட்டுமானங்கள் தடுத்து நிறுத்தப்படும்.

மேற்கண்ட இடத்தில் மின் இணைப்பு பெற அனுமதி வழங்கியவர்கள் மீதும் சட்டப்படி விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட ஆட்சியர் மூலம் வருவாய்த்துறை, நில அளவைத்துறை, இந்து அறநிலையத்துறை, காவல்துறை அடங்கிய சிறப்புக்குழு அமைத்து கோயிலுக்குச் சொந்தமான நிலங்கள் முழுவதும் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கவும், அலுவலர்கள் விரைவாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அமைச்சர்கள் உத்தரவிட்டனர்.

இந்த ஆய்வுக்குப் பின்பு, பரமக்குடியில் 197 கோயில் பணியாளர்களுக்கு அமைச்சர் சேகர்பாபு நிவாரணப் பொருள்களை வழங்கினார்.

இதையும் படிங்க: 'விரைவில் மதுரை மீனாட்சி கோயில் குடமுழுக்கு பணிகள்' - அமைச்சர் சேகர் பாபு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.