சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தலைமையிலான அதன் நிர்வாகிகள், முதலமைச்சர் ஸ்டாலினிடம் 11 அம்ச கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினர். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த விக்கிரமராஜா, “காலை சிற்றுண்டி வழங்கிய முதலமைச்சருக்கு நன்றியை தெரிவிக்கிறோம்.
வணிகர் நல வாரிய உறுப்பினர்கள் நியமனத்துடன் செயல்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். வேளாண் விளைபொருட்களுக்கு செஸ் வரியை முழுமையாக நீக்கிட வேண்டும். உள்ளாட்சி, நகராட்சி, மாநகராட்சி கடைகளின் வாடகை முரண்பாடுகளை நீக்க வேண்டும்.
பிளாஸ்டிக் தடைச்சட்ட மறு ஆய்வு, பிளாஸ்டிக் பூச்சு இல்லாத காகித கப்புகளுக்கு அனுமதி வழங்க வேண்டும. எம்.எஸ்.எம்.இ-ல் பதிவு பெற்ற வணிகர்களுக்கு மின்கட்டண சலுகை வேண்டும் உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கையை நிறைவேற்றிட முதலமைச்சரை சந்தித்து கோரிக்கை கடிதம் வழங்கப்பட்டுள்ளது.
படிப்படியாக எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக முதலமைச்சர் தெரிவித்தார்” என கூறினார்.
இதையும் படிங்க: இந்தியத் திருநாடு மென்மேலும் வளர ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்பட வேண்டும்... வணிகர்கள் கோரிக்கை