சென்னை எம்ஜிஆர் நகரைச் சேர்ந்தவர் காசிவிஸ்வநாதன். காசி விஸ்வநாதனுக்குத் திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளன. மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து தனியாக வாழ்ந்துவந்தார். இவருடைய நண்பர்கள் சுந்தர், பரமகுரு.
சமீபத்தில், நண்பர்களுடன் பெயிண்டிங் வேலைக்குச் சென்றுள்ளார். பின்னர், நேற்றிரவு (ஏப்ரல் 18) வீடு திரும்பிய காசி விஸ்வநாதனை மது குடிக்கலாம் என அழைத்துச் சென்று கே.கே. நகர் அண்ணா பிரதான சாலையில் நின்றிருந்த ஒரு ஆட்டோவினுள் அமர்ந்து மூவரும் மது அருந்தியுள்ளனர்.
அப்போது, காசி விஸ்வநாதனை நன்றாகக் குடிக்கவைத்து, அவருக்குப் போதை தலைக்கேறியதும் ஆட்டோவில் கிடந்த சுத்தியலால் அவரது தலையில் அடித்துக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடினர்.
இது குறித்து, கே.கே. நகர் காவல் துறையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. தகவறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து காசி விஸ்வநாதனின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும், அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வுசெய்ததில் சுந்தர், பரமகுரு ஆகியோர்தான் குற்றவாளிகள் எனக் கண்டறியப்பட்டது. இவர்கள் தேடப்பட்ட நிலையில், கொலை செய்த இருவரும் நேற்று கைதுசெய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில், முன்விரோதம் காரணமாக கொலைசெய்ததாக அவர்கள் ஒப்புக்கொண்டனர்.
இதையும் படிங்க: மக்களே உஷார்: வரும் 2-3 வாரங்கள் முக்கியமானதாக இருக்குமாம்!