ETV Bharat / state

‘மருத்துவமனைகள் காசநோய் குறித்த விவரங்களை நாள்தோறும் அனுப்ப வேண்டும்’ - சுகாதாரத்துறை உத்தரவு

தமிழகத்தில் கண்டறியப்படும் காசநோய் குறித்த விவரங்களை அரசு மற்றும் தனியார் மருத்துவமனை நிர்வாகங்கள் நாள்தோறும் பொது சுகாதாரத்துறைக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மருத்துவர். செல்வவிநாயகம்
மருத்துவர். செல்வவிநாயகம்
author img

By

Published : Apr 25, 2022, 6:12 AM IST

சென்னை: அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர்களுக்கும், பொது சுகாதாரத்துறை இயக்குநர் மருத்துவர். செல்வவிநாயகம் (ஏப்ரல் 24) சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், "காசநோயை முழுமையாக ஒழிக்கும் நோக்கில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றன.

2025க்குள் அந்நோயை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்ற இலக்குடன் தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டம் அனைத்து மாநிலங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை நோயாளிகளை கண்டறிதல், கூட்டு மருந்து சிகிச்சைகளை அளித்தல், தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் என காசநோய் ஒழிப்புத் திட்டப் பணிகள் மாநிலம் முழுவதும் விரிவாக மேற்கொள்ளப்படுகின்றன.

அதன் பயனாக, காசநோயை குணப்படுத்தும் விகிதம் கணிசமாக உயர்ந்து வருகிறது. அந்த நோயின் தாக்கத்தால் பாதிக்கப்படும் நோயாளிகளில் 84 சதவீதம் பேர் முதல் சிகிச்சையிலேயே குணப்படுத்தப்படுகின்றனர். தொடர் சிகிச்சைகள் மூலம் மீதமுள்ளவர்கள் குணப்படுத்தப்படுகின்றனர். அ சிகிச்சை காலத்தில் நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து அளிப்பதற்காக நிதியுதவி வழங்கப்படுகிறது.

இதற்கு முன்பு வரை மருத்துவ சேவைகள் இயக்ககத்தின் கட்டுப்பாட்டின் கீழ் அதற்கென சிறப்பு இயக்குநரும், மாவட்ட அளவில் உதவி இயக்குநர்களும் அப்பணிகளை மேற்கொண்டு வந்தனர்.தற்போது அவை அனைத்தும் பொது சுகாதாரத்துறை இயக்குநரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

மாநில பொது சுகாதாரத் துறை இயக்குநர், தேசிய காசநோய் ஒழிப்புத் திட்ட செயலாக்கம் மற்றும் முக்கிய முடிவுகளை மேற்கொள்ள இதன் மூலம் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அந்தவகையில், சுற்றறிக்கை அனுப்பப்படுகிறது. தமிழ்நாட்டில் புதிதாகக் கண்டறியப்படும் காசநோயாளிகளின் விவரங்களை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் நாள்தோறும் சுகாதாரத்துறைக்கு தெரியப்படுத்த வேண்டும். போதிய மருந்துகளை இருப்பில் வைத்திருக்க வேண்டும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: '18 வயது மேற்பட்டவர்களுக்கு இலவச பூஸ்டர் டோஸ் தடுப்பூசி' - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.