ETV Bharat / state

காமராஜர் குறித்து அவதூறு; ஒரு கண்டனம் கூட தெரிவிக்கத் திராணியற்றது காங்கிரஸ் கட்சி..

காமராஜரைப் பற்றி தவறான கருத்து கூறியதற்கு ஒரு கண்டனத்தைக் கூட தெரிவிக்கத் திராணியற்றது காங்கிரஸ் கட்சி என நாடார் பரிபாலன சங்கத் தலைவர் கூறியுள்ளார்.

author img

By

Published : Nov 1, 2022, 7:51 PM IST

ஒரு கண்டனம் கூட தெரிவிக்க திராணியற்றது காங்கிரஸ் கட்சி

சென்னை: திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கடந்த சில நாட்களுக்கு முன்பு பெருந்தலைவர் காமராஜரைப் பற்றி சில கருத்துக்களைக் கூறினார். அந்த கருத்துக்கள் காமராஜர் சொன்னது இல்லை என்று பல நாடார் சங்கங்கள் தங்கள் கண்டனத்தைத் தெரிவித்தது. அதன்படி நெல்லை தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்கம் சார்பாக, அனைத்து நாடார் சங்கம் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.

அதில் நவம்பர் 1ஆம் தேதி ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதாகவும் நாடார் சங்கங்களில் முக்கிய தலைவர்கள் மேல்சட்டை இல்லாமல் தலைமைச் செயலகத்தை முற்றுகை இடப் போவதாகவும் தீர்மானம் நிறைவேற்றினர்.

இந்நிலையில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் காமராஜர் பற்றி நான் பேசியதை வெட்டி, ஒட்டி சொல்லி இருக்கிறார்கள். மேலும் நான் சொன்ன கருத்துக்கள் யார் மனதையாவது புண்படுத்தி இருந்தால் அதற்கு வருத்தம் தெரிவிக்கிறேன் என்று பதிவிட்டிருந்தார்.

இதையடுத்து நெல்லை தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்கம் தலைவர் தா.பத்மநாபன் தலைமையில் ஆலந்தூரில் நடைபெற்ற கூட்டத்தில் ஆர்.எஸ்.பாரதி வருத்தம் தெரிவித்ததால் போராட்டம் கைவிடப்பட்டதாகத் தெரிவித்தனர். மேலும் ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த அனைத்து நாடார் சங்கங்களுக்கும் பாராட்டு தெரிவித்தனர்.

பின்னர் நாடார் சங்கத் தலைவர் பத்மநாபன் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில், திமுகவை எதிர்த்து நாங்கள் ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இல்லை, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, காமராஜர் சொல்லாத கருத்தைச் சொன்னதாகக் கூறியதை எதிர்த்து தான் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட இருந்தோம்.

அவர் வருத்தம் தெரிவித்ததையடுத்து, காமராஜர் வழியில் நாங்கள் போராட்டத்தைக் கைவிட்டோம். அதேபோல் காமராஜர் பற்றி தவறாகக் கருத்து கூறிய ஆர்.எஸ். பாரதி மீது முதலமைச்சர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் காமராஜரைப் பற்றிக் கூறிய தவறான கருத்துக்குத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஒரு கண்டனத்தைக் கூட தெரிவிக்கவில்லை. கூட்டணிக் கட்சியாக இருந்தாலும் கூட ஒரு கண்டனமாவது தெரிவித்து இருக்கலாம். அதற்குத் திராணி இல்லாதவர்கள் காங்கிரஸ் கட்சிக்காரர்கள். ஓட்டு வங்கிக்கு மட்டுமே காமராஜரைப் பயன்படுத்தி வருகின்றனர். இனி அது நடக்காது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 6 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.