கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க தமிழ்நாடு காவல் துறையினர் பின்பற்ற வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து தமிழ்நாடு டிஜிபி திரிபாதி சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் குறிப்பிட்டுள்ளது பின்வருமாறு:
1.காவல் நிலையங்களுக்கு வரும் புகார்தாரர்களுக்கு காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் உள்ளதா என தெர்மல் ஸ்கேனர் கருவியைக் கொண்டு பரிசோதித்து அனுமதிக்க வேண்டும்
2.காவல் நிலையங்களுக்கு வரும் புகார்தாரர்களை, கிருமிநாசினி மூலம் கைகளைச் சுத்தம் செய்த பின்னரே உள்ளே அனுமதிக்க வேண்டும்
3.புகார்தாரர்கள் தரும் புகார்களை காவல் துறையினர் திறந்த வெளியில் உள்ள இடத்தில் மட்டுமே வைத்து விசாரணை நடத்த வேண்டும். குறிப்பாக ஏசி அறையில் வைத்து விசாரிக்கக் கூடாது
4.காவல் நிலையங்களுக்கு வரும் புகார்தாரர்களுக்கு காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தால் புகாரைப் பெறாமல் மருத்துவர்களிடம் அனுப்பி வைக்க வேண்டும்
5.காவல் நிலையத்திற்குப் புகார்தாரர்கள் வந்து போவதால் காவல் நிலையம் முழுவதும் கிருமிநாசினி தெளித்துச் சுத்தமாக வைக்க வேண்டும் காவல் நிலையங்களில் கூட்டம் நடத்தக் கூடாது
6.காவல் நிலையங்களுக்குப் புகார் மற்றும் மனு அளிக்க வரும் புகார்தாரர்கள் பேப்பர் மற்றும் கோப்புகளில் கொண்டு வராமல் இ.மெயில் மூலம் அனுப்ப வேண்டும்
7.காவலர்களால் பயன்படுத்தப்படும் உடற்பயிற்சி கூடம், சிறார் மன்றங்கள், விளையாட்டு மைதானங்கள் ஆகியவற்றை மூட வேண்டும் காவலர்களுக்கான மருத்துவமனைகள் தயார் நிலையில் இருக்க வேண்டும்அனைத்து காவல் நிலையத்திலும் கரோனா குறித்த விழிப்புணர்வு பதாகைகளையும்,புகார் எண்களையும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வைத்திருக்க வேண்டும்
8.கரோனா அறிகுறியினால் சிகிச்சை பெற்று வருவோர் சரியாக ஒத்துழைப்பு அழைக்காமல் தகராறு செய்தால் மருத்துவ அலுவலர்கள், இதுதொடர்பாக காவல் துறையினரிடம் தெரிவித்தால் விரைவாகச் சென்று நடவடிக்கை எடுக்க வேண்டும்
இவ்வாறு சுற்றறிக்கையில் டிஜிபி கூறியுள்ளார்.
இதையும் படிங்க: கரோனா அச்சம் : தேனி நீதிமன்றங்கள் மூடல்