சென்னை: தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் தனிப்பிரிவு மூலம் பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுவாக வழங்கி வருகின்றனர். இந்நிலையில், முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு மனுக்களை வழங்க வந்த மக்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக மனுக்களை பெற்றார்.
20-க்கும் மேற்பட்டோரிடம் அவர் மனுக்களைப் பெற்றார். ஏற்கெனவே, 65 ஆயிரம் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.
முதலமைச்சர் தனிப்பிரிவில் மனு கொடுக்க பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். கரோனா பரவல் குறைந்ததன் காரணமாக மனுதாரர்களே நேரில் வந்து முதலமைச்சர் தனிப்பிரிவில் மனுக்களை அளித்து வருகின்றனர்.
முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகார் அளிக்க ஏற்கெனவே வலைதளம் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. cmcell.tn.gov.in என்ற வலைதளம் மூலம் பொதுமக்கள் தங்கள் புகார்களை அளிக்கலாம். தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் புகார் அளிக்க ஏதுவாக இந்த வலைதளம் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'பெண்களின் கண்களுக்கு ஒளியூட்டுவது கல்வி' - முதலமைச்சர் ஸ்டாலினின் ’மலாலா தின’ பதிவு