ETV Bharat / state

இந்து அறநிலையத்துறையின் மேம்படுத்தப்பட்ட 6 அர்ச்சகர் பயிற்சிப்பள்ளிகளைத் திறந்துவைத்த முதலமைச்சர் - அர்ச்சகர் பயிற்சிப் பள்ளி

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மேம்படுத்தப்பட்ட 6 அர்ச்சகர் பயிற்சிப்பள்ளிகள் உள்பட 9 பயிற்சிப்பள்ளிகளின் பயிற்சி வகுப்புகளை காணொலிக் காட்சி வாயிலாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து, அப்பள்ளிகளில் பயிலவுள்ள மாணவர்களுக்கு சேர்க்கை அனுமதி ஆணைகளை வழங்கினார்.

இந்து சமய அறநிலையத்துறையின் மேம்படுத்தப்பட்ட 6 அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளை முதலமைச்சர் திறந்து வைத்தார்

author img

By

Published : Aug 22, 2022, 3:56 PM IST

Updated : Aug 22, 2022, 4:30 PM IST

சென்னை: தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சென்னை, திருவண்ணாமலை, மதுரை, திருச்செந்தூர், பழநி மற்றும் ஸ்ரீரங்கம் ஆகிய இடங்களில் மேம்படுத்தப்பட்ட 6 அர்ச்சகர் பயிற்சிப்பள்ளிகளை தமிழ்நாடு முதலமைச்சர் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

மேலும் சமயபுரம் மாரியம்மன் கோயில் ஓதுவார் பயிற்சிப்பள்ளி, கும்பகோணம் நாகநாதசுவாமி கோயில் தவில் மற்றும் நாதஸ்வர பயிற்சிப்பள்ளி, திருவில்லிபுத்தூர் நாச்சியார் (ஆண்டாள்) கோயில் திவ்ய பிரபந்தப் பாடசாலை ஆகிய 3 பயிற்சிப்பள்ளிகளில் 46 மாணவர்களுடனும், பயிற்சி வகுப்புகளை காணொலிக்காட்சி வாயிலாக ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

மேலும் அப்பள்ளிகளில் பயிலவுள்ள மாணவர்களுக்கு சேர்க்கை அனுமதி ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 18 மாணவர்களுக்கு சேர்க்கை அனுமதி ஆணைகளை வழங்கினார்.

2021 – 2022ஆம் ஆண்டு இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கையில் 6 அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகள் 1 கோடியே 50 லட்சம் செலவில் புதுப்பிக்கப்படும் எனவும், சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் புதிய ஓதுவார் பயிற்சி பள்ளி ஏற்படுத்தப்படும் எனவும், திருநாகேஸ்வரம் நாகநாதசாமி கோயில் தவில் நாதஸ்வர இசைப்பள்ளி மேம்படுத்தப்படும் எனவும், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் திவ்ய பிரபந்த பாடசாலை மீண்டும் தொடங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டன.

அதன்படி சென்னை, திருவண்ணாமலை, மதுரை, திருச்செந்தூர், பழநி, ஸ்ரீரங்கம் ஆகிய இடங்களில் மேம்படுத்தப்பட்ட 6 அர்ச்சகர் பயிற்சிப்பள்ளிகளில் 151 மாணவர்களுடனும், சமயபுரம் மாரியம்மன் கோயில் ஓதுவார் பயிற்சிப் பள்ளி, கும்பகோணம் நாகநாதசுவாமி கோயில் தவில் நாதஸ்வர பயிற்சிப்பள்ளி, திருவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயில் திவ்ய பிரபந்தப் பாடசாலை ஆகிய 3 பயிற்சிப் பள்ளிகளில் 46 மாணவர்களுடனும், பயிற்சி வகுப்புகளை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

மேற்கண்ட 6 அர்ச்சகர் பயிற்சிப்பள்ளிகள் உள்பட 9 பயிற்சிப்பள்ளிகளும் உண்டு உறைவிடப்பள்ளியாக செயல்படுவதோடு, பயிற்சி பெறும் ஒவ்வொரு மாணவருக்கும் மாதம் ரூ.3,000 வீதம் ஆண்டு ஒன்றிற்கு மொத்தம் 70.92 லட்சம் ரூபாய் உதவித்தொகை திருக்கோயில்கள் சார்பாக வழங்கப்படுகிறது.

இதையும் படிங்க: அனைத்து சமூகத்தினரையும் அர்ச்சகர்களாக நியமிப்பதற்கான அரசின் உத்தரவை நீதிமன்றம் உறுதி செய்தது

Last Updated : Aug 22, 2022, 4:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.