ETV Bharat / state

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய அரசு தயாராக இல்லை- கே.எஸ்.அழகிரி

author img

By

Published : Feb 10, 2021, 5:15 PM IST

பெட்ரோல், டீசலுக்கு கலால் வரி விதிப்பதற்கு பதிலாக அவற்றை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டுவந்தால், விலையேற்றத்தை குறைக்கலாம். ஆனால், அவற்றிற்கு மத்திய அரசு தயாராக இல்லை என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டியுள்ளார்.

The central government is not ready to reduce petrol and diesel prices - KS Alagiri

சென்னை: நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில்," மத்தியில் பாஜக ஆட்சி அமைந்த பிறகு கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல் மக்களை வதைக்கும் பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகின்றன. சர்வதேசச் சந்தையில் கச்சா எனர்ணெய் விலை குறைந்தாலும் இந்தியச் சந்தையில் பெட்ரோல், டீசல் விலை குறைவதில்லை. அதற்கு மாறாக, மத்திய அரசு 11 முறை கலால் வரியை உயர்த்தி ரூபாய் 20 லட்சம் கோடி வருமானத்தைப் பெருக்கிக் கொண்டிருக்கிறது. நிதிப் பற்றாக்குறையைச் சமாளிப்பதற்கு பெட்ரோல், மால் மீது வரியை உயர்த்தி, வரலாறு காணாத பகல் கொள்ளையை மோடி அரசு நடத்தி வருகிறது.

பாஜக ஆட்சியில் 2021 பிப்ரவரியில் சர்வதேசச் சந்தையில் கச்சா என பொய் விலை ஒரு பீப்பாய் விலை 50 டாலராகக் குறைந்தது. ஒரு லிட்டர் பெட்ரோலின் அடக்க விலை ரூபாய் 31ஆகவும், கலால் வரி ரூபாய் 60ஆகவும் உயர்ந்தது. இதனால், பெட்ரோல் விற்பனை விலை ஒரு லிட்டர் இன்று 90 ரூபாயை எட்டிவிட்டது. இதன் மூலம் அடக்க விலையில் கலால் வரி 200 சதவிகிதமாக உயர்த்தப்பட்டிருக்கிறது.

ஆனால், பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வந்தாலோ, அல்லது 2014 நிலவரப்படி கலால் வரியை விதித்தாலோ பெட்ரோல் விலை கடுமையாகக் குறைய வாய்ப்பு இருக்கிறது. 2021 பிப்ரவரி மாத நிலவரப்படி, பெட்ரோலின் அடக்க விலை ரூபாய் 31. ஆனால், தற்போது விற்பனை விலை ரூபாய் 91ஆக விற்கப்படுகிறது. 2014ஆம் ஆண்டியிருந்த கலால் வரியை விதித்தால், பெட்ரோல் லிட்டருக்கு ரூபாய் 64 க்கு விற்க முடியும். அதேபோல, கலால் வரிக்கு மாற்றாக 29 சதவிகித ஜிஎஸ்டி விதித்தால், 38 ரூபாய்க்கு ஒரு லிட்டர் பெட்ரோல் விற்க முடியும். ஆனால், இதை எதையுமே செய்வதற்கு மோடி அரசு தயாராக இல்லை.

2014ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை பெட்ரோலின் மீதான வரி 142 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் விற்பனை விலை 22 சதவிகிதம் உயர்ந்திருக்கிறது. இதன் மூலம் 2014 ஆம் ஆண்டில் 20 சதவிகிதமாக இருந்த கலால் வரி, 2021 ஆம் ஆண்டில் 200 சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது. ஏற்கனவே கரோனா தொற்று காரணமாகவும், பொருளாதார வீழ்ச்சியினாலும் பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாகியிருக்கிற மக்கள் மீது கலால் வரியை உயர்த்திய நடவடிக்கையை மத்திய பாஜக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சிக்கேற்ப பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வேண்டும், கலால் வரி விதிப்பதைத் தவிர்க்க வேண்டும் என மத்திய அரசைக் கேட்டுக் கொள்கிறேன். இத்தகைய மக்கள் விரோதப் போக்கு தொடருமேயானால், பிரதமர் மோடி அரசு கடும் விளைவுகளைச் சந்திக்க வேண்டி வரும் என எச்சரிக்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.