ETV Bharat / state

சென்னை சாலையில் சிதறிக்கிடந்த ரூ.22,000 - மீட்டுக்கொடுத்த சிறுவர்களுக்கு குவியும் பாராட்டு!

author img

By

Published : May 6, 2022, 3:14 PM IST

சென்னை அண்ணா நகர்ப்பகுதியில் சாலையில் சுய நினைவின்றிக் கீழே கிடந்த முதியவரின் 22ஆயிரம் பணத்தை மீட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்த சிறுவர்களை துணை ஆணையர் நேரில் அழைத்துப் பாராட்டினார்.

boys helped the old man, boys recovered 22 thousand from road
சென்னை சாலையில் சிதறிய பனம் - மீட்ட சிறுவர்களுக்கு குவியும் பாராட்டு.

சென்னை: அண்ணா நகர்ப் பகுதியில் வசித்து வருபவர், கமலக்கண்ணன். முதியவரான இவர் தனியாக வாழ்ந்து வருகிறார். குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர். கடந்த புதன் கிழமை கமலக்கண்ணன் குடித்துவிட்டு அண்ணா நகரில் உள்ள பேருந்து நிலையத்தில் சுய நினைவின்றி கீழே விழுந்து கிடந்தார்.

அப்போது கீழ்ப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சிறுவர்களான லிக்கித், யோஜித், கிரிதிக் ஆகியோர் தனது குடும்பத்தினருடன் உறவினர் வீட்டிற்குச் சென்றுவிட்டு திரும்பிக்கொண்டு இருந்தனர். சுய நினைவின்றி கீழே கிடந்த கமலக்கண்ணனின் அருகே அவரது பணம் 22ஆயிரம் ரூபாய் சிதறிக்கிடந்ததைக் கண்ட சிறுவர்கள் உடனே பணத்தை மீட்டு, குடும்பத்தினர் உதவியுடன் அவரையும் மீட்டு அண்ணாநகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

சிறுவர்களுக்கு குவியும் பாராட்டு: பின்னர் இந்தச் சம்பவம் தொடர்பாக அண்ணா நகர் காவல் நிலைய ஆய்வாளர் ராஜேஷ் பாபு அந்த சிறுவர்களை அழைத்து நேரில் வாழ்த்துகளைத் தெரிவித்தார். மேலும் முதியவரை அழைத்து அறிவுரை கூறி அவரிடம் அவரது பணத்தை ஒப்படைத்தார்.

சென்னை சாலையில் சிதறிக்கிடந்த பணம் - மீட்டுக் கொடுத்த சிறுவர்களுக்கு குவியும் பாராட்டு
இதைப்பற்றி அறிந்த அண்ணா நகர் துணை ஆணையர் சிவபிரசாத் சிறுவர்களை நேரில் அழைத்துப் பாராட்டி இனிப்பு வழங்கி ஊக்கப்படுத்தினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி சிறுவர்களுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

இதையும் படிங்க: இந்தி பட வசூலை ஓரம்கட்டிய KGF -2

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.