ETV Bharat / state

எட்டு நாட்களாக ஆழ்கடலில் தத்தளித்த கப்பல்.. உயிர் தப்பிய மீனவர்கள் ஆட்சியரிடம் கண்ணீர் கோரிக்கை! - kanyakumari fishermen rescued - KANYAKUMARI FISHERMEN RESCUED

விசைப்படகு பழுதாகி இந்திய - ஓமன் ஆழ்கடல் பகுதியில் 8 நாட்கள் தத்தளித்த 12 தமிழக மீனவர்கள், 65 லட்சம் ரூபாய் மதிப்பிலான விசை படகை கடலில் விட்டுவிட்டு வெளிநாட்டு கப்பல் உதவியுடன் உயிர் தப்பி நாகர்கோவில் வந்தடைந்தனர்.

பழுதான கப்பல், மீட்கப்பட்ட மீனவர்கள்
பழுதான கப்பல், மீட்கப்பட்ட மீனவர்கள் (credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 3, 2024, 4:18 PM IST

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் குமரி மாவட்டம் மற்றும் கேரளா, கோவா, மகாரஷ்டிரா உள்ளிட்ட இந்தியாவில் பல்வேறு மாநில கடல் பகுதிகளிலும், வளைகுடா நாடுகளிலும் தங்கி இருந்து மீன் பிடி தொழில் செய்து வருகின்றனர்.

குமரி மாவட்டத்தில் போதிய வசதிகள் கொண்ட மீன்பிடி துறைமுகங்கள் இல்லாத காரணத்தால், இங்கு உள்ள மீனவர்கள் அண்டை மாநிலமான கேரளாவில் உள்ள பல்வேறு துறைமுகங்களில் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். அந்த வகையில், குமரி மாவட்டம் இரவிபுத்தன்துறை கடற்கரை கிராமத்தை சேர்ந்த அருளப்பன் என்பவருக்கு சொந்தமான அலங்கார மாதா என்ற விசைபடகில், கேரளா மாநிலம் கொச்சின் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து செப்டம்பர் மாதம் 10 -ஆம் தேதி ஆழ் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

இந்த படகில் அருளப்பன், ஜான்சன், பூத்துரையை சேர்ந்த ஷாஜன், மயிலாடுதுறை மாவட்டம் பழையாரை சேர்ந்த மணிகண்டன், சவாரி, ஆலீஷ், மணி, கடலூர் மாவட்டம் சுவாமியார் பேட்டையை சார்ந்த நவீன், காரைக்கால் மாவட்டம் காரை கால் மேடு பகுதியை சார்ந்த சுதீர் , கிழிஞ்சமேடை சேர்ந்த பாரதிராஜ், ஆகிய 12 மீனவர்கள் மீன் பிடிக்க சென்றனர்.

இந்த மீனவர்கள் 20 முதல் 25 நாட்கள் வரை ஆழ்கடலில் தங்கி மீன் பிடிக்கக் கூடியவர்கள். செப்டம்பர் மாதம் 16 ஆம் தேதி இவர்கள் கோவா ஆழ் கடல் பகுதியில் சுமார் 200 கடல் மைல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்த பொழுது திடீரென விசை படகின் இயந்திரம் பழுதடைந்து நடுக்கடலிலே பழுதை சரி செய்ய முடியாமல் பரிதவித்து உள்ளனர்.

இதையும் படிங்க: வைகை எக்ஸ்பிரஸ் ரயில் படிக்கட்டில் பயணித்த நபர் தவறி விழுந்து உயிரிழப்பு!

யாருடைய உதவியும் கிடைக்காமல் 8 நாட்களாக கடலில் உயிருக்கு போராடி தத்தளித்து கொண்டு இருந்தனர் . பலத்த காற்றின் காரணமாக அந்த கப்பல் இந்திய கடல் எல்லையில் தத்தளித்து கொண்டு இருந்தவர்களை ஓமன் கடல் பகுதிக்கு இழுத்து சென்றுள்ளது.

செப்டம்பர் மாதம் 25 ஆம் தேதி அந்த வழியாக ஆப்பிரிக்கா நாட்டிற்கு சென்று கொண்டிருந்த யுஏஎப்எல் துபாய் என்ற சரக்கு கப்பல், நடுகடலில் தத்தலித்த மீனவர்களுக்கு ஒருநாள் முழுவதும் உடனிருந்து பாதுகாப்பு வழங்கி உள்ளது. பின்னர் இந்திய மீனவர்கள் 12 நபர்கள் படகுடன் சர்வதேச கடலில் தத்தளிப்பதை மும்பையில் உள்ள இந்திய கப்பல் துறை அதிகாரிக்கு தெரிவித்தனர்.

மீனவர்களது விசைப்படகு சர்வதேச கடல் எல்லையில் உள்ளதால், இந்திய கப்பல் படை மீட்க வாய்ப்பு இல்லை என்று கூறி உள்ளனர். ஆகவே, ஓமன் கடல் பகுதியில் இருந்து கொச்சின் துறைமுகம் வந்துகொண்டிருந்த ஹிளா என்ற சரக்கு இழுவை கப்பல் மீனவர்களை மீட்டு வர சம்மதம் தெரிவித்தது. ஆனால், விசைப்படகை இழுத்து வர வாய்ப்பு இல்லை என்று கப்பல் மாலுமி கூறியதால், மீனவர்கள் விசை படகை நடுகடலில் கைவிட்டு செப்டம்பர் மாதம் 26 ஆம் தேதி ஹிளா கப்பலில் ஏறி தங்கள் உயிரை காப்பாற்றி கொண்டனர்.

ஹிளா கப்பல் இம்மாதம் 1 ஆம் தேதி கேரளா மாநிலம் கொச்சின் துறைமுகம் வந்து 12 மீனவர்களையும் கரை சேர்த்தது. கன்னியாகுமரி மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அதிகாரி கொச்சின் சென்று, மீட்கப்பற்ற 12 மீனவர்களையும் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கொண்டு வந்து சேர்த்தனர்.

இதுகுறித்து மீனவர்கள், இயந்திரம் பழுதடைந்து 8 நாட்களாக மீட்பு உதவி கிடைக்காததால் ஓமன் கடல் பகுதிக்கு படகு இழுத்து செல்லப்பட்டது. அரசிடம் இழுவை கப்பல் இருந்திருந்தால் படகு மீட்கப்பட்டு இருக்கும். ஆர்ட்டி போன் இருந்திருந்தால், நாங்கள் நடு கடலில் உயிருக்கு போராடி கொண்டிருப்பதை அரசுக்கும், உறவினர்களுக்கும் கூறி இருக்க முடியும். எங்கள் உயிரை காப்பாற்றிய யுஏஎப்எல் துபாய் கப்பல் மாலுமிக்கும், ஹிளா கப்பல் மாலுமிக்கும், தமிழக மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அதிகாரிக்கும், அரசுக்கு நன்றி கூறினர்.

மேலும், 65 லட்சம் ரூபாய் மதிப்புள்ள விசை படகை கடலில் விட்டு வந்ததால், உயிர் தப்பிய குமரி மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேறு விசை படகு இல்லாமல் குடும்பம் பட்டினியால் வாடும் நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே, அரசு திட்டத்தில் ஒரு விசை படகு வழங்கி எங்கள் வாழ்வாதாரத்தை காத்திட வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

மேலும், தெற்காசியா மீனவர் தோழமை பொதுச்செயலாளர் அருட்பணி சர்ச்சில் கூறும்போது, மீனவர்களுக்கு இலங்கை அரசாங்கம் கொடுத்துள்ள ஆர்ட்டிபோன் கொடுக்கப்பட வேண்டும் என்றும் அரசு சார்பில் கன்னியாகுமரி மாவட்டத்தை மையமாக வைத்து இழுவை கப்பல் வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.

ஆனால், இதுவரையிலும் அந்தத் திட்டத்தை அரசு செயல்படுத்தவில்லை. இழுவை கப்பல் இருந்திருந்தால் ஆழ்கடலில் பழுதாகும் விசைப்படகுகளை மீட்டு கொண்டுவர ஏதுவாக இருந்திருக்கும். அதேபோல, ஆர்ட்டிபோன் மீனவர்களின் கைகளில் இருந்திருந்தால் இப்படிப்பட்ட காலகட்டங்களில் உடனடியாக அரசுக்கும் அல்லது உறவினர்களுக்கும் தகவல் கொடுத்திருக்க முடியும் ஆகவே இனி வரும் காலங்களிலாவது மீனவர்களின் கருத்தில் கொண்டு இதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.