ETV Bharat / state

பட்டா பெயர் திருத்தம் செய்ய ரூ.20 ஆயிரம் லஞ்சம்; துணை வட்டாட்சியர் கையும், களவுமாக சிக்கியது எப்படி? - lalgudi deputy tahsildar arrest - LALGUDI DEPUTY TAHSILDAR ARREST

பட்டா பெயர் திருத்தம் செய்ய ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய திருச்சி லால்குடி துணை வட்டாட்சியர், லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாரிடம் கையும் களவுமாக சிக்கினார்.

கைது செய்யப்பட்ட துணை வட்டாட்சியர், கோப்புப்படம்
கைது செய்யப்பட்ட துணை வட்டாட்சியர், கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 3, 2024, 4:30 PM IST

Updated : Oct 3, 2024, 4:47 PM IST

திருச்சி : திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், அன்பில் கிராமம் மங்கம்மாள் புரத்தைச் சேர்ந்தவர் மோகன். இவரின் தந்தை கணேசன் கடந்த 2002ம் ஆண்டு ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவரிடமிருந்து லால்குடி மங்கம்மாள் புரத்தில் உள்ள 94 சென்ட் நிலத்தை கிரையம் செய்துள்ளார்.

இந்நிலையில், இந்த நிலத்திற்கான பட்டாவில் கிருஷ்ணசாமி என்பதற்கு பதிலாக கிருஷ்ணமூர்த்தி என்று தவறுதலாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனை சரி செய்து கொடுக்குமாறு மோகன் கடந்த மார்ச் 5ம் தேதி லால்குடி வருவாய் கோட்டாட்சியருக்கு விண்ணப்பித்திருந்துள்ளார்.

அதன் பெயரில் இவருடைய மனு தொடர்பாக சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் நடவடிக்கை எடுத்து பரிந்துரை செய்து லால்குடி துணை வட்டாட்சியருக்கு அனுப்பி உள்ளார். இந்நிலையில் மோகன் தான் விண்ணப்பித்து ஆறு மாதங்கள் ஆகியும், தனது வேலை முடியாத காரணத்தால் லால்குடி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று, அங்கிருந்த துணை வட்டாட்சியர் ரவிக்குமாரை கடந்த ஜூலை மாதம் முதல் தொடர்ந்து சந்தித்து மனுவின் நிலை குறித்து கேட்டுள்ளார்.

இறுதியாக, மோகன் கடந்த செப் 26ம் தேதி லால்குடி வட்டாட்சியர் அலுவலகம் சென்று துணை வட்டாட்சியர் ரவிக்குமாரை சந்தித்து தனது நிலத்திற்கான பட்டா பெயர் திருத்தம் செய்து கொடுக்குமாறு மீண்டும் வலியுறுத்தி உள்ளார்.

இதையும் படிங்க : கோழி திருடுவதாகக் கூறிய மூதாட்டி.. துடிக்க துடிக்க கொலை செய்த இளைஞர்.. திருப்பத்தூரில் பரபரப்பு!

அதற்கு துணை வட்டாட்சியர் ரவிக்குமார் ரூ.50 ஆயிரம் கொடுத்தால் உங்களது மனுவை பரிந்துரை செய்து அனுப்புவதாக கூறி உள்ளார். இதற்கு மோகன் மறுக்கவே, இறுதியாக ரூ.20 ஆயிரம் கொடுத்தால் மட்டுமே மனுவை பரிந்துரை செய்ய முடியும் என்று துணை வட்டாட்சியர் கண்டிப்புடன் கூறி உள்ளார்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத மோகன் திருச்சி லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி மணிகண்டன் அவர்களிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில், இன்று மதியம் லால்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில், மோகனிடமிருந்து ரூ.20 ஆயிரம் லஞ்சம் பணத்தை துணை வட்டாட்சியர் ரவிக்குமார் பெற்றபோது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை ஆய்வாளர்கள் சக்திவேல், பிரசன்ன வெங்கடேஷ், பாலமுருகன், சேவியர் ராணி மற்றும் போலீசார் துணை வட்டாட்சியர் ரவிக்குமாரை கையும், களவுமாக கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

Last Updated : Oct 3, 2024, 4:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.