சென்னை தாம்பரம் அடுத்த சேலையூர் அன்னை சத்யா பகுதியில் வதித்து வருவர் பாலாஜி. இவர் அதே பகுதியில் பூக்கடை வைத்து நடத்தி வருகிறார்.
இந்நிலையில் இவருடைய மகன் கவியரசு (3) இன்று வீட்டில் விளையாடி கொண்டு இருக்கும்போது, தொலைக்காட்சி பெட்டி அருகேயிருந்த பாலாஜியின் செல்போனை எடுக்க முயன்றுள்ளார்.
அப்போது எதிர்பாரத விதமாக தொலைக்காட்சி பெட்டி சிறுவனின் மீது விழுந்துள்ளது. பின் அலறல் சத்தம் கேட்டு வந்த அருகிலிருந்தவர்கள் சிறுவனை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
அங்கு அவனை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
தகவலறிந்து வந்த சேலையூர் காவல்துறையினர், சிறுவனின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பிவைத்தனார்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொலைக்காட்சி பெட்டி விழுந்ததில் மூன்று வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:பெங்களூரு கலவரம் : ஒரு லட்சம் கைப்பேசி எண்களின் இணைப்பைத் துண்டித்த சிசிபி தொழில்நுட்பக் குழு!