ETV Bharat / state

பம்பர் பொருத்த விதிக்கப்பட்ட தடை தொடரும் - சென்னை உயர் நீதிமன்றம் - 4 wheelers

நான்கு சக்கர வாகனங்களில், பம்பர் பொருத்தப்படுவதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்
author img

By

Published : Sep 21, 2021, 3:06 PM IST

சென்னை: நான்கு சக்கர வாகனங்களில் பம்பர் பொருத்தப்படுவதால் விபத்து காலங்களில் 'ஏர் பேக்' (air bag) செயல்பட முடியாத நிலை ஏற்படுவதாகவும், மேலும் எதிரில் வரும் வாகனம் மற்றும் பொதுமக்களுக்கும் கடுமையான சேதம் ஏற்படுகிறது எனவும் கூறி மத்திய அரசு பம்பர் பொருத்தத் தடை விதித்தது.

மத்திய அரசின் தடையை மீறி நான்கு சக்கர வாகனங்களில், பம்பர்கள் பொருத்தப்படுவதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் லெனின் பால் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், பொதுமக்கள் மட்டுமல்லாமல் அமைச்சர்கள், உயர் அலுவலர்களின் வாகனங்களில் கூட தடைசெய்யப்பட்ட பம்பர்கள் பொருத்தப்படுவதற்கு அதிருப்தி தெரிவித்திருந்தனர்.

இதையடுத்து, போக்குவரத்து ஆணையரக அலுவலர்கள் கார் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்களில் பொருத்திய பம்பர்களை உடனடியாக அகற்ற வேண்டும். இல்லாவிட்டால், ஐந்தாயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்திருந்தனர்.

மக்களின் பாதுகாப்பு அவசியம் -தடை விதிக்க மறுப்பு

இந்தநிலையில், மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து பம்பர் தயாரிப்பு நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (செப்.21) விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில், "பம்பர்களால் வாகன விபத்து ஏற்படுகிறது என்பதற்கு அறிவியல் பூர்வமான ஆதாரம் ஏதுமில்லை. வாகனங்களில் பயணிக்கும் பயணிகளுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை.

1980ஆம் ஆண்டு முதல் வாகனங்களில் பம்பர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது வாகனங்களுக்கான கூடுதல் வசதி மட்டுமே" என்று தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், பொதுமக்களின் பாதுகாப்பு மிக அவசியம். பம்பர் பொருத்திய வாகன ஓட்டுநர்கள் அதிவேகத்தில் வாகனங்களை இயக்குவார்கள் எனக் குறிப்பிட்டனர்.

மேலும் பொதுமக்களின் நலன் கருதியே மத்திய அரசு இந்தத் தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இது மத்திய அரசின் கொள்கை முடிவு, இதில் நீதிமன்றம் தலையிட முடியாது எனக் கூறி உத்தரவிட்டனர்.

மத்திய அரசின் உத்தரவை மாநில அரசு ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், இதை மாநில அரசு கடுமையாக அமல்படுத்த வேண்டும்" எனவும் கூறினர்.

இதையும் படிங்க: மாநிலங்களவைத் தேர்தல்: திமுக வேட்புமனு தாக்கல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.