ETV Bharat / state

அதிமுக உட்கட்சி விவகாரத்தில் தலையீடு இல்லை; அமித்ஷா கருத்தின் பின்னணி என்ன?

author img

By

Published : May 3, 2023, 9:42 PM IST

அதிமுக உள்கட்சி பிரச்னைகளில் தலையிட விரும்பவில்லை என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளது, மீண்டும் அதிமுகவை ஒன்றிணைக்க முயற்சி செய்தால் அதிமுக-பாஜக கூட்டணியில் சிக்கல் ஏற்பட்டுவிடுமோ என்ற எண்ணத்தில் அவர் பேசியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. அமித்ஷா கருத்தின் பின்னணி குறித்து ஆராய்கிறது இந்த செய்தித் தொகுப்பு.

Etv Bharat
Etv Bharat

சென்னை: நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டுகளே இருக்கும் நிலையில் தலைவர்கள் பேசும் கருத்துகள் அரசியல் தளத்தில் கவனம் பெறுகின்றன. தேசிய அளவில் பாஜகவின் தேர்தல் முகமாக கருதப்படுபவர் உள்துறை அமைச்சர், அமித்ஷா. இந்தியா முழுவதும் தேர்தல் அரசியலில் பாஜக சார்பாக இவர் எடுக்கும் முடிவு இறுதியானது. சமீபத்தில் கர்நாடகத்தேர்தல் தொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு அமித்ஷா பேட்டியளித்தார்.

அதில், அதிமுகவின் உட்கட்சி விவகாரம் குறித்த கேள்விக்குப் பதிலளித்த அமித்ஷா, "அதிமுக விவகாரங்களில் தலையிட விரும்பவில்லை. ஓபிஎஸ் - ஈபிஎஸ் இருவரும் சேர்ந்து சுமூக முடிவை எடுக்க வேண்டும். சுமூக முடிவை இருவரும் பேசி எடுக்க வேண்டுமா, வேண்டாமா என்பது என்னை சார்ந்தது இல்லை" எனக் கூறியிருந்தார்.

அமித்ஷாவின் இந்த கருத்து அதிமுக - பாஜக வட்டாரங்களில் மீண்டும் பேசுபொருளாக மாறியுள்ளது. கடந்த காலங்களில் ஓபிஎஸ் - ஈபிஎஸ் பிரிந்திருந்தபோது இருவரையும் கையைப் பிடித்து இணைத்து வைத்த வரலாறு பாஜகவிற்கு உண்டு. இந்தநிலையில், அமித்ஷாவின் இந்த பட்டும்பாடாமலும் கூறிய கருத்திற்கு பின்னால் பல கேள்விகள் எழுந்துள்ளன. சமீப காலமாக அதிமுக - பாஜகவில் உள்ள இரண்டு கட்டத் தலைவர்கள் கடுமையாக கருத்து மோதல்களில் ஈடுபட்டு வந்தனர்.

குறிப்பாக, அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "அண்ணாமலை அரசியலில் முதிர்ச்சி இல்லாதவர். அவரைப் பற்றி பேசுவது அவசியமில்லை" என கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் நடைபெற்ற அமித்ஷா - ஈபிஎஸ் சந்திப்பில் அண்ணாமலையும் கலந்துகொண்டார். கூட்டணி குறித்து பல்வேறு விவகாரங்கள் குறித்தும், அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக வெளியான ஆடியோ குறித்தும் பேசப்பட்டதாகத் தகவல் வெளியாகியது.

அதில், அண்ணாமலை கலந்துகொள்வார் என எதிர்பார்க்காத எடப்பாடி பழனிசாமி, அவர் மீது பல்வேறு புகார்களை அமித்ஷாவிடம், ஈபிஎஸ் கூற இருந்தார் என சொல்லப்பட்டது. சந்திப்பு முடிந்ததும் வெளியில் வந்து பேட்டியளித்த எடப்பாடி பழனிசாமி, "அதிமுக - பாஜக கூட்டணி தொடர்கிறது. அண்ணாமலைக்கும் எனக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை" எனக் கூறியிருந்தார். இதனால், நாடாளுமன்றத் தேர்தலுக்கு ஒரு ஆண்டு இருக்கும் நிலையில் ஒரு வழியாக அதிமுக - பாஜக இடையேயான மோதல்களை அமித்ஷா முடித்து வைத்துவிட்டார் எனப் பேசப்பட்டது.

உடைந்த கண்ணாடியை ஒட்டவைத்தது எனக் கூறப்பட்ட நிலையில் பாஜகவின் பொருளாளர் எஸ்.ஆர். சேகர், "அதிமுக ஆறாக உள்ளது. எங்களுக்கு 25 தொகுதிகள் ஒதுக்க வேண்டும். அதிமுக கொடுக்கின்ற இடத்தில் இல்லை" என கூறிய கருத்து மீண்டும் புயலை கிளப்பியது. இதற்கு பதிலளித்த அதிமுக அமைப்புச் செயலாளர் ஜெயக்குமார், "இதுபோன்று கூட்டணியில் விரிசல் ஏற்படும் வகையில் பேசும் நபர்களை அண்ணாமலை கண்டிக்க வேண்டும். இல்லை என்றால் இது அண்ணாமலையின் கருத்தாக எடுத்துக்கொள்ளப்படும்" என கூறினார்.

அண்ணாமலையையும், ஈபிஎஸ்யையும் இணைத்து சந்தித்த அமித்ஷா, "தேர்தலுக்கு ஒரு ஆண்டுக்கு முன்பே இணைத்துவிட்டால் கசப்புகள் நீங்கிவிடும். களத்தில் பாதிப்பு இருக்காது" என கருதியதாக கூறப்படுகிறது. ஆனால், அதிமுக - பாஜக இடையே மோதல் போக்குத் தொடர்வதால் களத்தில் இந்தக் கூட்டணி தாக்குபிடிக்குமா என்ற கேள்வி எழுகின்றது. அண்ணாமலையின் தொடர் நடவடிக்கைகள், திமுக இடத்தில்தான் அதிமுகவையும் வைத்துள்ளார் எனத் தெரியவருகிறது.

இரண்டுமே ஊழல் படிந்த கட்சி என்ற புள்ளியில் அண்ணாமலை நகர்வதாக கூறப்படுகிறது. திமுகவினருடைய சொத்துப்பட்டியலை வெளியிட்ட அண்ணாமலைக்கு, திமுகவினர் எதிர்ப்பைக் கடந்து அதிமுகவிடம் தான் அதிக அளவில் வந்தது. அமித்ஷாவின் இந்த கருத்திற்கு ஓபிஎஸ் - ஈபிஎஸ் என இரண்டு தரப்பும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். பாஜகவின் தமிழ்நாட்டின் கிளைக் கட்சியாக அதிமுக செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டு அதிமுகவின் மீது உள்ளது.

அமித்ஷாவின் இந்த கருத்து மூலம் இந்த குற்றச்சாட்டு நீர்த்துப்போகும் என எடப்பாடி பழனிசாமி தரப்பினர் நம்புகின்றனர். மேலும், தேர்தல் ஆணையத்தில் அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அங்கீகாரம் பெற்றதால் ஓபிஎஸ்-ஐ இணைக்க பாஜக அழுத்தம் கொடுக்காது எனவும்; இதனால் சுதந்திரமாக செயல்படலாம் எனவும் ஈபிஎஸ் தரப்பினர் நினைக்கின்றனர். இந்த கருத்தின் மூலம் எடப்பாடி பழனிசாமிக்கு இனி டெல்லி பாஜக மேலிடம் ஆதரவு கொடுக்காது என ஓபிஎஸ் தரப்பினர் வரவேற்பு தெரிவிப்பதாக கூறுகின்றனர்.

2017ஆம் ஆண்டு அணிகளை இணைத்து ஓபிஎஸ்-ஐ துணை முதலமைச்சர் பதவியை ஏற்றுக்கொள்ள வைத்தது பிரதமர் மோடிதான் என பின்னாளில் ஓபிஎஸ் கூறியிருந்தார். கடந்த காலங்களில் பல்வேறு விவகாரங்களில் பாஜகவிற்கு ஓபிஎஸ் ஆதரவாக இருந்ததால் ஓபிஎஸ்-ஐ கைவிட டெல்லி பாஜக மேலிடம் மறுப்பதாக கூறப்படுகிறது. தற்போது உள்ள சூழ்நிலையில் எடப்பாடி பழனிசாமியிடம் கட்சி இருப்பதால் நடுநிலையாக செயல்படவே அமித்ஷா இந்த கருத்தைக் கூறியுள்ளதாகப் பேசப்படுகிறது.

கடந்த காலங்களில் இருந்து தற்போது வரை மோடிக்கு ஆதரவாக இருக்கும் தலைவர்களை கைவிட முடியாது என ஓபிஎஸ் பெயரை குறிப்பிடாமல், அண்ணாமலை பேசியிருந்தார். இது போன்ற நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்க, அமித்ஷாவின் கருத்துப்படி, அதிமுக உட்கட்சி விவகாரங்களில் பாஜக தலையிடாமல் இருக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இது குறித்து பேசிய மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம், "அதிமுக உட்கட்சி விவகாரங்களில் தலையீடு என அமித்ஷா கூறியிருப்பது என்பது ஓபிஎஸ்-ஐ மீண்டும் பலவீனப்படுத்தும். தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக அங்கீகாரம் செய்துள்ளது.

சமீபகாலத்தில் இது போன்ற விவகாரங்களில் நீதிமன்றம் சென்று யாரும் வெற்றி அடையவில்லை. அதனால், தற்போது உள்ள சூழலில் பாஜக நினைத்தால் மட்டுமே ஓபிஎஸ்-ஐ அதிமுகவில் இணைக்க முடியும். ஆனால், அமித்ஷாவின் கருத்து ஓபிஎஸ்-ஐ கைவிட்டது போன்றுதான் பார்க்கத் தோன்றுகிறது. இரண்டு பேரும் வேண்டும் என்று பிரதமர் மோடி நினைப்பதால் நடுநிலையாக கடந்து செல்லலாம் என்பதற்குகூட அமித்ஷா இவ்வாறு கூறி இருக்கலாம்.

ஓபிஎஸ்-ஐ இணைக்கக்கோரி மேலும் அழுத்தம் கொடுத்தல் அதிமுக-பாஜக கூட்டணியில் சிக்கல் எற்படும் என்பதற்குகூட அமித்ஷா இதுபோன்று கூறியிருக்கலாம். அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கு 20 தொகுதிகள் ஒதுக்க இருப்பதாகத் தகவல். அப்படி ஒதுக்கும் பட்சத்தில் ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோருக்கு ஓரிரு இடங்கள் வழங்கப்படலாம்" எனக் கூறினார்.

இதையும் படிங்க: Actor Manobala : நடிகர் மனோபாலா மறைவு - முதலமைச்சர், திரைப்பிரபலங்கள் இரங்கல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.