உலகின் பல்வேறு தனியார் நிறுவனங்கள் மனிதர்களை விண்வெளிக்குச் சுற்றுலா அனுப்பும் திட்டத்தை செயல்படுத்த முயன்று வருகிறது.
விண்வெளி பயணம்:
அந்த நிறுவனங்களில் முக்கியமான நிறுவனம் உலகின் பெரும் கோடீஸ்வரர்களுள் ஒருவருமான இங்கிலாந்தின் ரிச்சர்ட் பிரான்சனுக்குச் சொந்தமான 'விர்ஜின் கேலடிக்'.
ஆந்திர மாநிலத்தைப் பூர்வீகமாக கொண்ட ஸ்ரீஷா பாண்ட்லா, ரிச்சர்ட் பிரான்சன், விர்ஜின் கேலடிக் நிறுவனத்தின் ஸ்பேஸ்ஷிப் டூ யூனிட்டியில் உள்ள 11 பேருடன் சேர்ந்து விண்வெளிக்குச் செல்லத் திட்டமிட்டனர்.
இந்திய நேரப்படி நேற்று முன் தினம் (ஜூலை 11) மாலை 6:30 மணிக்கு விண்வெளிக்குப் புறப்படத் தயாராக இருந்தனர். ஆனால், மோசமான வானிலை காரணமாக இரவு 8 மணியளவில் தங்களது விண்வெளிப் பயணத்தை தொடங்கி புதிய வரலாற்றைப் படைத்தனர்.
ரிச்சர்ட் பிரான்சன் தமிழ்வம்சாவளியா?
இந்நிலையில், இங்கிலாந்தின் பெரும் கோடீஸ்வரரான ரிச்சர்ட் பிரான்சன், இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர் என்றும்; குறிப்பாக, தமிழ் வம்சாவளி என்றும் ஒரு சுவாரஸ்யத் தகவல் கிடைத்துள்ளது.
2019ஆம் ஆண்டு தனது நிறுவனத்தின் சார்பில் மும்பையிலிருந்து - லண்டனுக்கு நேரடி விமான சேவையைத் தொடங்கி வைப்பதற்காக ரிச்சர்ட் பிரான்சன் மும்பை வந்துள்ளார்.
அப்போது அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், தன்னுடைய மூதாதையர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதை அறிந்து கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், தனது முந்தைய தலைமுறையினர் இந்தியாவில் வாழ்ந்தவர்கள் என்று தனக்குத் தெரியும். ஆனால், தங்கள் தொடர்புகள் எவ்வளவு வலிமையானவை என்பதை உணரவில்லை எனக்கூறியுள்ளார்.
டி.என்.ஏ பரிசோதனையில் வெளியான உண்மை:
'1793ஆம் ஆண்டு முதல் எங்களது நான்கு தலைமுறைகள் தமிழ்நாட்டின் கடலூரில் வாழ்ந்திருக்கிறார்கள். எனது மூதாதையரான பாட்டி ஆரியா என்பவர் ஒரு இந்தியப் பெண்.
எனது உமிழ்நீர், டி.என்.ஏ பரிசோதனைகளின் மூலம் என்னுடைய மூதாதையர்கள் தமிழ்நாட்டிலுள்ள கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை அறிந்து கொண்டேன். இதனை எனது இன்ஸ்டாகிராமிலும் பதிவிட்டுள்ளேன்' என ரிச்சர்ட் பிரான்சன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: விண்வெளி பயணத்தைதொடங்கிய ரிச்சர்ட் பிரான்சன்