ETV Bharat / state

‘ஆளுநருக்கு எதிராக எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும்’ - தங்கம் தென்னரசு - ஆளுநர் ரவி

எந்த ஆயுத்தை எப்போது எடுக்க வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும். இந்த மோதல் போக்கை ஆரம்பித்து வைத்தது ஆளுநர் தான், எந்தெந்த வாய்ப்புகளை பயன்படுத்த வேண்டும் என்பதை முதலமைச்சர் முடிவு செய்வார் என தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

தங்கம் தென்னரசு
தங்கம் தென்னரசு
author img

By

Published : Jun 30, 2023, 4:06 PM IST

செய்தியாளர்களைச் சந்தித்த தங்கம் தென்னரசு

சென்னை தலைமை செயலகத்தில் நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை, மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மூத்த வழக்கறிஞர் வில்சன் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, “ஆளுநர், அமைச்சர் செந்தில் பாலாஜியை நீக்கம் செய்திருப்பதாக அறிவித்தார். முதலமைச்சர் ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்றார். நேற்று நள்ளிரவில் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆளுநரை அழைத்து கண்டித்துள்ளார். அதனைத் தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜி நீக்கம் செய்த கடிதத்தை நிறுத்தி வைத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

சட்டப்படி அமைச்சரை நியமிக்கவும், நீக்கம் செய்யவும் ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது. இது விவகாரம் தொடர்பாக ஆளுநருக்கு விரிவான கடிதத்தை முதலமைச்சர் இன்று எழுதவுள்ளார். அதில், அமைச்சரை நியமித்ததோ நீக்குவதோ தனிப்பட்ட அதகாரம் ஆளுநருக்கு இல்லை என்பதை தெளிவுபடுத்தியுள்ளார். அரசியல் அமைப்பு சட்டப்படி ஆளுநர் நடவடிக்கை எடுக்கும் முன்னதாக எந்த ஆலோசனையும் பெறாமல் அவசரகதியாக எடுத்து முடிவை அரசு நிராகரிக்கிறது.

முழுக்க முழுக்க முதலமைச்சரின் அதிகாரம், முதலமைச்சர் ஆலோசனை பெறாமல் ஒரு அமைச்சரை நீக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்பதை தெளிவுப்படுத்தியுள்ளோம். ஆளுநர் தேவையில்லாத பிரச்னைகளை உருவாக்குகிறார். நாங்கள் சட்டரீதியாக போராடி வெற்றி பெற்று வருகிறோம். ஆளுநரின் இத்தகைய செயல்பாடுகளை நாங்கள் கண்டிக்கிறோம். முதலமைச்சரின் அதிகார வரம்புக்கு உட்பட்ட அமைச்சரின் நியமன நீக்க விவகாரதில் ஆளுநர் அதிகார வரம்பு மீறி செயல்படுகிறார்” என குற்றம்சாட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர், “இல்லாத பூனையை இருட்டு வீட்டுக்குள் தேடுவது போல ஆளுநர் செயல்படுகிறார். சர்க்காரியா கமிஷன் காலத்திலிருந்தும், 2 ஜி விவகாரத்திலும் திமுக மீது எந்த ஆதாரத்தையும் அளிக்க இயலவில்லை. செந்தில் பாலாஜி விவகாரத்தில் நியாயமான விசாரணை நடத்த எந்த இடையூறும் செய்யவில்லை. செந்தில் பாலாஜி மீது மற்றும் குற்றம் சாட்ட காரணம் என்ன? குற்றம் சாட்டப்பட்டவரை தகுதி நீக்கம் செய்யமுடியாது என முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவே கூறியிருக்கிறார்.

ஒன்றிய அமைச்சர்கள் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவர்களை நீக்கி விட்டார்களா? செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை அரசியல் பழிவாங்கும் செயல். மத்திய அமைச்சர்கள் மீது வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் அவர்கள் அமைச்சர்களாக தொடர்கின்றனர். ஆளுநர் அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக செந்தில் பாலாஜி மீதான இது போன்ற செயல்பாடுகளில் ஈடுபடுகிறார். மலை இலக்கானால் யார் வேண்டுமானாலும் அம்பை எய்தலாம் எனும் நோக்கில் எதிர் கட்சியினர் மட்டுமல்லாமல் ஆளுநரும் திமுகவினர் மீதான தாக்குதலில் ஈட்டுப்பட்டு வருகிறார்.

திமுக இதுபோன்ற விவகாரங்களை சட்ட ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் எதிர்கொள்ளும். எந்த ஆயுத்தை எப்போது எடுக்க வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும். இந்த மோதல் போக்கை ஆரம்பித்து வைத்தது ஆளுநர் தான், இதனை தொடர்ந்து எந்தெந்த வாய்ப்புகளை பயன்படுத்த வேண்டும் என்பதை முதலமைச்சர் முடிவு செய்வார். செந்தில் பாலாஜி விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவை அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை கூட்டுவது தொடர்பாக முதலமைச்சர் முடிவு செய்வார் எனவும் கூறினார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் ரகுபதி, “செந்தில் பாலாஜி இலாக இல்லாத அமைச்சராக தொடர்கிறார். ஆகவே இது விசாரணைக்கு எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தாது. ஏற்கனவே அவரிடம் இருந்த துறைகள் வேறு அமைச்சர்களுக்கு ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது. மேலும் அவர் நிர்வகித்த போக்குவரத்து துறையும் அவரிடம் இல்லை என்ற நிலையில் எப்படி வழக்கில் சாட்சியங்களை கலைக்க முடியும். மேலும் அவர் நீதிமன்றக்காவலில் தற்பொழுது இருந்து வருகிறார்” என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய மூத்த வழக்கறிஞர் வில்சன், “153,154, 163, 164 ன்படி ஆளுநர் நடந்து கொண்டாரா?. அதன்படி ஆளுநர் நடக்கவில்லை. 5 பக்க கடிதத்தில் செந்தில் பாலாஜி மீது உச்ச நீதிமன்றம் சில விதிமீறல்களை கூறியிருப்பதாக ஆளுநர் கூறுகிறார்.. அதற்கும் அமைச்சரை பதவி நீக்குவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. உச்ச நீதிமன்றம் மனோஜ் தருல்லா வழக்கில் பதவி நீக்கம் செல்லாது என தெரிவித்து உள்ளது.

அரசியல் அமைப்புச் சட்டத்தில் சொல்லப்பட்டுள்ள சரத்துக்களை ஆளுநர் பின்பற்றவில்லை. நாளை ஆளுநர் ஒரு நீதிபதியையே பதவி நீக்கும் செயல் ஏற்படலாம். எதிர்க்கட்சியாக இருக்கும்போது நீங்களே குறிப்பிட்டிருக்கிறீர்களே? என்ற கேள்விக்கு,நாற்காலி இல்லாத அமைச்சராக தொடர்கிறார்” என்றார்.

மேலும், மத்தியில் பொறுப்பில் உள்ள அமைச்சர்கள் மீது வழக்கு நடைபெறுகிறது. முதலமைச்சர் 30 ஆண்டு அரசியல் அனுபவம் பெற்றவர். அவர் எப்போதும் வரம்பு மீறி செயல்பட்டதில்லை. முதலமைச்சர் கடிதத்தில் அப்படி குறிப்பிடவில்லை என தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

இதையும் படிங்க: Senthil Balaji: செந்தில் பாலாஜியின் பதவி நீக்கம் நிறுத்தி வைப்பு - ஆளுநர் கடிதம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.