ETV Bharat / state

5000 ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுப்பது மனிதாபிமானமற்ற செயல் - தங்கம் தென்னரசு கண்டனம் - Thangam Thennarasu latest news

சென்னை: முன் அனுமதியின்றி உயர்கல்வி படித்துவிட்டதாகக் கூறி ஐயாயிரம் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுப்பது மனிதாபிமானமற்ற செயல் என முன்னாள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சரும், திமுக சட்டப்பேரவை உறுப்பினருமான தங்கம் தென்னரசு கண்டனம் தெரிவித்துள்ளார்.

தங்கம் தென்னரசு
தங்கம் தென்னரசு
author img

By

Published : Jul 28, 2020, 1:37 PM IST

இதுகுறித்து தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ”முன் அனுமதியின்றி உயர்கல்வி படித்துவிட்டதாகக் கூறி, ஏறத்தாழ ஐயாயிரம் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என அலுவலர்களுக்கு, தொடக்கக்கல்வித்துறை உத்தரவிட்டிருப்பதாக செய்திகள் வந்துள்ளன. உண்மை என்னவென்றால், அனுமதிக்காக ஆசிரியர்கள் விண்ணப்பித்து, அதன் மீது எந்த நடவடிக்கையும் இன்றி, இந்த அரசின் செயலற்ற நிர்வாகத்தால் பல ஆண்டுகளாக அந்தக் கோரிக்கைகள் அதிகார மட்டத்தில் தேங்கிக் கிடக்கின்றன.

நீண்ட காலதாமதத்தின் காரணமாக, அரசின் அனுமதியை எதிர்நோக்கி, இடைப்பட்ட காலத்தில் உயர்கல்வியினை மேற்கொண்ட ஆசிரியர்களுக்குப் பின்னேற்பு அனுமதி வழங்க அரசு கருதியிருப்பதாக கடந்த ஜனவரி மாதம் செய்திகள் வந்த நிலையில், தற்போது "நடவடிக்கை பாயும்" என்று வந்துள்ள செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.

இப்போது கரோனா நோய்த் தொற்றால் நாடே அல்லல்பட்டுக்கொண்டிருக்கின்ற நிலையில், அனுமதி பெறவில்லை என்ற காரணத்தைக் காட்டி ஐயாயிரம் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுப்பது என்பது, கொஞ்சமும் மனிதாபிமானமற்ற செயல் மட்டுமல்ல; ஈர நெஞ்சம் படைத்த எவராலும் எப்போதும் ஏற்க முடியாத செயலும் ஆகும்.

எனவே, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல, ஏற்கனவே அவதிக்கு ஆளாகி இருக்கும் ஆசிரியர்களை மேலும் இன்னலுக்கு உள்ளாக்கிடும், தொடக்கக்கல்வித்துறையின் இந்த ஆணையை உடனே திரும்பப் பெற வேண்டும் என திமுக சார்பில் வலியுறுத்துகின்றேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தொடக்க கல்வித்துறை உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.