இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "மக்களவையில், பள்ளிக்கரணை சதுப்புநிலப் பகுதிகளை பாதுகாக்க, நான், பலமுறை கோரிக்கை விடுத்துள்ள நிலையில், தற்போது சென்னை மாநகராட்சி பள்ளிக்கரணை சதுப்புநிலத்தைத் தூர்வாரி ஆழப்படுத்துவதாக அறிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
இந்த முடிவு, முற்றிலும் இயற்கை விதிகளுக்கு முரணானதாகும். பள்ளிக்கரணை சதுப்புநிலம் என்பது பல்வேறு பல்லுயிர்கள் வாழும் சூழியல் சார்ந்த சதுப்புநிலப் பகுதியாகும். பள்ளிக்கரணை சதுப்புநிலப் பகுதியை மேம்படுத்தி பல்வேறு உயிரினங்கள் வாழ்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர, அதை ஒரு நீர்த் தேக்கமாகக் கருதுவது எந்த வகையிலும் ஏற்புடையதல்ல.
எனவே பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தைத் தூர்வாரும், துக்ளக் ஆட்சியினைப் பிரதிபலிக்கும் இந்த முடிவைக் கைவிட்டு, அதனை மேம்படுத்தி பாதுகாக்கும் வழிமுறைகளைத் தமிழ்நாடு அரசும், சென்னை மாநகராட்சியும் முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றேன்" என பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: பள்ளிக்கரணை குப்பை கொட்டும் வளாகத்தில் மாநகர ஆணையர் ஆய்வு!