வரும் தேர்தலில் திமுக கூட்டணிக்கு தமிமூன் அன்சாரி ஆதரவு தெரிவித்திருக்கிறார். இன்று(மார்ச்.08) அறிவாலயத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதியைச் சந்தித்து மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் இதற்கான ஆதரவு கடிதம் வழங்கப்பட்டது.
வரும் தேர்தலில் முழு ஆதரவை அளிப்பதாகவும், திமுக கூட்டணியில் போட்டியிட தொகுதிகள் ஒதுக்கவும் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
![கருணாஸ் கடிதம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-dmk-support-karunas-tamimun-script-photo-7209655_08032021134426_0803f_1615191266_105.jpg)
தொடர்ந்து கருணாஸ் தலைமையிலான முக்குலத்தோர் புலிப்படை கட்சியும் திமுகவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. அக்கட்சி சார்பில் இளைஞரணி தலைவர் அஜய் வாண்டையார் ஆதரவு கடிதத்தினை திமுக அலுவலகத்தில் நேரடியாக வழங்கினர். திமுக தனது தொகுதி பங்கீட்டை இன்று(மார்ச்.08) இறுதி செய்ய உள்ள நிலையில் இரு கட்சிகளுக்கும் தொகுதி ஒதுக்கப்படுமா என்பது கேள்விகுறியாக உள்ளது.
இதையும் படிங்க:பெரியார் சொன்னதை... சீமான் செய்கிறார் - மகளிர் தினத்தில் மகத்தான பரிசு!