ETV Bharat / state

தாலிக்கு தங்கம் திட்டம் மாற்றம் - தமிழ்நாடு பட்ஜெட் கூறுவது என்ன?

author img

By

Published : Mar 18, 2022, 1:53 PM IST

Updated : Mar 18, 2022, 4:17 PM IST

மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவித் திட்டம், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித்திட்டமாக மாற்றப்பட்டுள்ளது.

தாலிக்கு தங்கம் திட்டம் மாற்றம்
தாலிக்கு தங்கம் திட்டம் மாற்றம்

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (மார்ச். 18) நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்த பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. அதில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று திருமண நிதி உதவித் திட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ள மாற்றம்.

மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவித் திட்டம், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித்திட்டமாக மாற்றப்படுகிறது. இதன் மூலம் அரசுப்பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்று விட்டு, மேற்படிப்பிற்குச் செல்லும் அனைத்து மாணவிகளுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக வழங்கப்படும்.

பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு அல்லது தொழிற்படிப்பு ஆகியவற்றில் இடை நிற்றல் இன்றி முடிக்கும் வரை மாதம் ஆயிரம் ரூபாய் அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். வேறு கல்வி உதவித்தொகை பெறுபவர்களும் இந்த நிதியையும் சேர்த்து பெறலாம். ஒவ்வொரு ஆண்டும் 6 லட்சம் மாணவிகள் பயன்பெற வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ள இத்திட்டத்திற்காக 698 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஆனால், இதே நேரத்தில் வறிய நிலையில் உள்ள விதவையரின் மகள்களுக்கு, ஈ.வே.ரா. மணியம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம், டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி கலப்புத் திருமண நிதியுதவித் திட்டம், அன்னை தெரசா அம்மையார் நினைவு ஆதரவற்ற பெண்களுக்கான திருமண நிதியுதவித் திட்டம், டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதியுதவித் திட்டம் ஆகிய திட்டங்கள் எவ்வித மாற்றமுமின்றி தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாலிக்கு தங்கம் திட்டம் மாற்றம்

இதுகுறித்து செய்தியாளர்களிடம் தமிழ்நாடு நிதித்துறை செயலாளர் முருகானந்தம் கூறும்போது, "மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவித் திட்டம், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித்திட்டமாக மாற்றப்படுகிறது. இதன் மூலம் ஆண்டுக்கு 6 லட்சம் பேர் பயனடைவார்கள்" என்றார்.

இதையும் படிங்க: பட்ஜெட் - நகைக்கடன் தள்ளுபடிக்காக ரூ.1,000 கோடி ஒதுக்கீடு

Last Updated : Mar 18, 2022, 4:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.