ETV Bharat / state

Pongal 2022 : தைப் பொங்கல் சிறப்பு தொகுப்பு - முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு - தைப் பொங்கல்

2022ஆம் ஆண்டு தைப் பொங்கலுக்கான 20 உணவுப் பொருள்கள் அடங்கிய தொகுப்பு அறிவிப்பை முதலமைச்சர் ஸ்டாலின்(MK Stalin) வெளியிட்டுள்ளார்.

முதலமைச்சர் ஸ்டாலின்
முதலமைச்சர் ஸ்டாலின்
author img

By

Published : Nov 17, 2021, 11:44 AM IST

Updated : Nov 17, 2021, 12:26 PM IST

பச்சரிசி, வெல்லம், முந்திரி உள்ளிட்ட 20 பொருள்கள் அடங்கிய பொங்கல் தொகுப்புக்கான அறிவிப்பை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

2022ஆம் ஆண்டு தைப் பொங்கலை(Pongal 2022) சிறப்பாகக் கொண்டாடிட இந்த அறிவிப்பை முதலமைச்சர் வெளியிட்டுள்ளார். சுமார் இரண்டு கோடியே 15 லட்சம் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு இந்தத் தொகுப்பு வழங்கப்படும்.

இலங்கைத் தமிழர் மறுவாழ்வு மையத்தில் இருப்பவர்களுக்கும், இலங்கைத் தமிழர்களுக்கும் இந்த பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தைப் பொங்கல் சிறப்பு தொகுப்பு
தைப் பொங்கல் சிறப்பு தொகுப்பு

இந்தப் பொங்கல் தொகுப்பில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கடுகு, சீரகம் உள்ளிட்ட சமையல் பொருள்களும் வழங்கப்படவுள்ளன. மொத்தம் ஆயிரத்து 88 கோடி மதிப்பில் இந்த சிறப்புத் தொகுப்பு வழங்கப்படவுள்ளது.

இதையும் படிங்க: Bharathi Mani Passed away: 70 ஆண்டுகால பன்முக வித்தகர் பாரதி மணி காலமானார்!

Last Updated : Nov 17, 2021, 12:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.