சென்னை: ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிப்பெற்ற பட்டதாரிகள் திமுகவின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்த பள்ளிக்கல்வித்துறை அலுவலகத்தில் போராட்டம் நடத்துவதற்கு காலை முதல் வருகை தந்தனர். ஆனால் அனுமதி இல்லை என கூறி காவல் துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
அப்போது பேசிய ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ராணிப்பேட்டையைச் சேர்ந்த ரவி கூறும்போது, “ஆசிரியர் பணிக்கு மீண்டும் போட்டித்தேர்வு என்ற அரசாணை 149-ஐ நீக்கம் செய்யப்பட வேண்டும். ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை தேர்ச்சி மற்றும் பதிவு மூப்பு அடிப்படையில் பணி வழங்க வேண்டும்.
தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பினை திரும்பப் பெற்று தேர்ச்சி பெற்று பல ஆண்டுகளாக காத்திருக்கும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெற்றவர்களை கொண்டு காலி பணியிடங்களை நிரந்தர பணியிடங்களாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்திற்கு அனுமதி கேட்டிருந்தோம்.
ஆனால் திடீரென அனுமதி கிடையாது என காவல் துறையினர் கைது செய்கின்றனர். ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதி பெற்ற 30 ஆயிரம் பேர் தயாராக இருக்கிறோம். மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆட்சி ஆசிரியர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் ஆட்சியாக இருந்தது.
அதனைத் தொடர்ந்து கைது செய்து அழைத்து செல்லப்பட்டவர்கள் ஸ்டாலின் தான் வராரு, வியடில் தரப் போராரு என கூறினர். ஸ்டாலின் தான் வந்தாச்சு, விடியல் தான் எப்போது” என கேள்வி எழுப்பினர்.
இதையும் படிங்க: மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் என்ன? - நன்னெறிப் பண்புகள் குறித்து அறிக்கை தாக்கல்