ETV Bharat / state

கஞ்சா புகைப்பதில் ஏற்பட்ட தகராறு: கஞ்சா வியாபாரி வெட்டிக் கொலை - Chennai District News

சென்னை: தாம்பரம் அடுத்த முடிச்சூர் பகுதியில் கஞ்சா புகைப்பதில் ஏற்பட்ட தகராறு காரணமாக ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

கஞ்சா புகைப்பதில் ஒருவர் வெட்டிக் கொலை
கஞ்சா புகைப்பதில் ஒருவர் வெட்டிக் கொலை
author img

By

Published : Aug 12, 2020, 2:34 AM IST

சென்னை தாம்பரம் அடுத்த முடிச்சூர் நேதாஜி நகர் 3ஆவது தெருவைச் சேர்ந்தவர் ரவி (43). இவர் முடிச்சூர் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் கஞ்சா விற்பது, கட்ட பஞ்சாயத்து செய்வது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்நிலையில், ரவி தனது வீட்டின் அருகே நின்றுகொண்டிருந்த போது அங்கு வந்த ஒருவர், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளைக் கொண்டு ரவியை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதனைக் கண்ட பொதுமக்கள் உடனே ரவியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

இதுகுறித்து பெருங்களத்தூர், பீர்க்கன்காரணை காவல் நிலையத்திற்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த காவல் துறையினர் இது குறித்து வழக்குப் பதிவு செய்து, ரவியை கொலை செய்த நபரை தேடி வந்தனர்.

கைதான ராஜேஷ்
கைதான ராஜேஷ்

காவல் துறையின் விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர்தான் ரவியை கொலை செய்தது தெரியவந்தது. பின்னர் அவரை கைது செய்தனர். கஞ்சா புகைக்கும்போது ஏற்பட்ட தகராறு காரணமாகவே கொலை செய்ததாக ராஜேஷ் வாக்குமூலம் அளித்தார். இதுகுறித்து அவரிடம் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: செங்கம் அருகே நிலத்தகராறு காரணமாக மூதாட்டி மீது தாக்குதல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.