சென்னை: ஆதம்பாக்கம் பிரதான சாலையில் உள்ள கே.எம். பெயின்ட் கடையில் திடீரென புகை வந்துள்ளது. இதையடுத்து உள்ளே இருந்த ஊழியர்கள் அனைரும் கடையில் இருந்து அலறி அடித்துக் கொண்டு வெளியேறினர். கண் இமைக்கும் நேரத்தில் தீ கடை முழுவதும் பரவி மளமளவென எரிந்தது.
கடை ஊழியர்கள் அளித்த தகவலின் பேரில் 3 தீயணைப்பு வாகனங்களுடன் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். பிறகு நீண்ட நேரம் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். கடையின் உள்ளே ரசாயன பொருட்களும் இருந்ததால், தீயை அணைக்க தீயணைப்புத்துறையினர் சிரமப்பட்டனர்.
இந்த விபத்தில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்துள்ளன. தீ விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. விபத்து குறித்து ஆதம்பாக்கம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: தாம்பரம் அருகே தனியார் ஷோரூமில் தீ விபத்து