ETV Bharat / state

தேர்தல் முடிவிலிருந்தே பதவிக்காலம்... நிர்வாகிகள் தேர்விற்குப் பின் அல்ல; கூட்டுறவுச் சங்க தேர்தல் விவகாரத்தில் நீதிமன்றம் உத்தரவு! - ஈடிவி பாரத் தமிழ்நாடு

Madras High Court: கூட்டுறவு சங்கங்களுக்குத் தேர்தல் முடிவுகள் வெளியான நாளிலிருந்தே, உறுப்பினர்களின் பதவிக்காலம் துவங்குகிறது எனவும், நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட பின் அல்ல என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tenure from the date of declaration of election results for cooperative societies madras high court order
கூட்டுறவு சங்க தேர்தல் முடிவுகள் வந்தவுடன் பதவி காலம் தொடங்குகிறது என நீதிமன்றம் உத்தரவு
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 18, 2023, 10:49 PM IST

சென்னை: தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களுக்கு கடந்த 2018-ஆம் ஆண்டு ஏப்ரல், ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் தேர்தல் நடத்தப்பட்டன. இருப்பினும், வழக்குகள் காரணமாக, சில கூட்டுறவு சங்கங்களில், 10 முதல் 14 மாதங்கள் தாமதமாக, 2019-ஆம் ஆண்டு ஜூன் மாதம் தான் நிர்வாகிகள் தேர்தல் நடத்தப்பட்டன.

இந்நிலையில், ஐந்து ஆண்டுகள் பதவிக்காலம் முடிவடைந்து விட்டதாக கூறி, கூட்டுறவு சங்கங்களை நிர்வகிக்க அதிகாரியை நியமித்து கடந்த ஆகஸ்ட் மாதம் அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்தும், நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்ட பின் பதவிக்காலம் அமலுக்கு வரும் என கூறி, 2024-ஆம் ஆண்டு வரை கூட்டுறவு சங்க நடவடிக்கையில் தலையிட அரசுக்கு தடை விதிக்கக் கோரியும், கூட்டுறவு சங்கங்களை கலைக்க தடை கோரியும், கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.சவுந்தர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில், கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் தேர்தல் நடந்து நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்ட பிறகே சங்கங்கள் செயல்பட துவங்கப்பட்டன. எனவே, நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட பின் ஐந்து ஆண்டுகளுக்கான பதவிக்காலம் துவங்குகிறது. உறுப்பினர் தேர்தல் முடிவுகள் வெளியான நாளில் இருந்து அல்ல என வாதிடப்பட்டது.

இந்த வாதங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழக அரசு தரப்பில், தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் சட்டம், இந்திய அரசியல் சட்டப் பிரிவுகளை சுட்டிக்காட்டி, சங்கங்களின் தேர்தல் முடிவுகள் வெளியான நாளில் இருந்து தான் ஐந்து ஆண்டுகள் பதவிக்காலம் துவங்குகிறது என வாதிடப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தமிழ்நாடு கூட்டுறவு சங்க சட்டத்தில், உறுப்பினர்களின் பதவிக்காலம், எந்த தேதியில் இருந்து ஐந்து ஆண்டு பதவிக்காலம் துவங்குகிறது எனக் கூறப்படாத நிலையில், தேர்தல் முடிவுகள் வெளியான நாளில் இருந்தே, பதவிக்காலம் துவங்குவதாக கருத முடியும் எனவே, நிர்வாகிகள் தேர்வுக்கு பிறகு தான் துவங்குகிறது எனக் கூற முடியாது என தெரிவித்து, நிர்வாகிகளின் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

சில காரணங்களுக்காக உடனடியாக நிர்வாகிகளை தேர்ந்தெடுத்து, சங்கம் செயல்பாட்டுக்கு வர முடியவில்லை என்பதற்காக, பதவிக்காலத்தை நீட்டிக்க முடியாது என நீதிபதி தனது உத்தரவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதையும் படிங்க: அதோ தெரியுது பார் மலை... 2 கிமீ தூரத்தில் உள்ள அருவியை பார்க்க ரூ.500 கட்டணம் வசூலித்த வனத்துறை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.