ETV Bharat / state

10 ,11, 12ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள்: குறைந்த விழுக்காட்டிலேயே மாணவர்கள் தேர்ச்சி - Supplementary exam pass percentage is low

அரசுத் தேர்வுத்துறையால் நடத்தப்பட்ட 10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான துணைத் தேர்வு முடிவுகளில் 32 விழுக்காடு மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றிருக்கின்றனர்.

10 ,11, 12ஆம் வகுப்பு துணைத் தேர்வு: குறைந்த சதவீதத்தில் மாணவர்கள் தேர்ச்சி

author img

By

Published : Sep 13, 2022, 4:41 PM IST

சென்னை: அரசுத் தேர்வுத்துறையால் நடத்தப்பட்ட 10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான துணைத்தேர்வு முடிவுகளில், குறைந்த விழுக்காட்டில் மட்டுமே மாணவர்கள் தேர்ச்சி பெற்று இருப்பது தெரியவந்துள்ளது. அதிலும், 11-ம் வகுப்பு துணைத்தேர்வுகளில் தேர்வு எழுதிய 66ஆயிரம் மாணவர்களில், 8 விழுக்காடு மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.

10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிவுகளுக்குப் பிறகு, தோல்வியடைந்த பாடங்களில் மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு அளிக்கப்படுகிறது. அதன்படி பொதுத்தேர்வு முடிவு வெளியான இரு மாதங்களுக்குள்ளாக துணைத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அதன்படி துணைத்தேர்வுகள் நடத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டன. இந்த முடிவுகளில் அதிகமான மாணவர்கள் தோல்வி அடைந்திருக்கக்கூடிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

10-ம் வகுப்பு துணைத்தேர்வில் 24 விழுக்காடு மாணவர்கள் தேர்ச்சிபெற்றுள்ளனர். அதாவது, தேர்வு எழுதிய 93ஆயிரம் மாணவர்களில், 22,000 மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். +1 வகுப்பு துணைத்தேர்வை 66 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் எழுதியதில், 8 விழுக்காடு மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பன்னிரெண்டாம் வகுப்பு துணைத்தேர்வினைப் பொறுத்தவரை, 51 ஆயிரம் மாணவர்கள் எழுதியதில், 16 ஆயிரம் மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது 32 விழுக்காடு மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றிருக்கின்றனர்.

இதையும் படிங்க:அதிமுக அலுவலகம் சூறையாடப்பட்ட வழக்கில் சிசிடிவி பதிவுகள் சேகரிப்பு - சிபிசிஐடி பதில்

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.