செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் புனித தோமையார் மலை ஒன்றியம், அகரம் தென் ஊராட்சியில் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் ஆதிகேசவன் என்பவர் முன்னிலையில் இருந்தார். திமுக சார்பில் போட்டியிட்ட ஜெகதீஸ்வரன் என்பவர் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த கோரிக்கைவைத்தார்.
அதனடிப்படையில் வட்டார வளர்ச்சி அலுவலர் மறுவாக்கு எண்ணிக்கையைத் தொடங்கினார். திமுக ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார் தூண்டிதலின்பேரில் மறுவாக்கு எண்ணிக்கை நடைபெறுவதாகக் கூறி ஆதிகேசவனின் ஆதரவாளர்கள் வாக்கு எண்ணும் மையத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் ஜெயக்குமாரை வெறியேற்றும்படியும் போராட்டக்காரர்கள் கோஷங்களை எழுப்பினர். இந்த நிலையில் மறுவாக்கு எண்ணிக்கை நடைபெற்றதில் திமுக வேட்பாளர் ஜெகதீஸ்வரன் வெற்றிபெற்றதாக அலுவலர்கள் தெரிவித்தனர்.
இதனால் ஆதிகேசவன் தொண்டர்கள் வாக்கு எண்ணும் மையத்தின் மேல் தளத்திற்குச் சென்று கீழே குதிக்க முயற்சித்தனர். இதன் காரணமாக அங்குப் பதற்றமான சூழ்நிலை நிலவியது.
இதையும் படிங்க: தமிழ்நாடு - கேரள நதி நீர்ப் பங்கீடு குறித்து ஸ்டாலின் இறுதி முடிவு எடுப்பார் - அமைச்சர் சாமிநாதன்